என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 5 லேப்டாப்கள்
- ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் லேப்டாப்கள் என்ட்ரி லெவல் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
- இந்தியாவில் என்ட்ரி லெவல் லேப்டாப்களின் விலை சுமார் 20 ஆயிரம் ரூபாயில் இருந்து துவங்குகிறது.
புதிதாக லேப்டாப் வாங்குவது சற்று சிக்கல் நிறைந்த ஒன்று. ஆனால், லேப்டாப்களில் தேர்வு செய்வதற்கு அதிக ஆப்ஷன்கள் சந்தையில் கிடைக்கின்றன. இந்திய சந்தையில் என்ட்ரி லெவல் லேப்டாப் மாடல்களின் விலை சுமார் 20 ஆயிரம் ரூபாயில் இருந்து துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல்களின் விலை லட்சங்களை கடந்துள்ளன.
அந்த வகையில், ஒவ்வொருத்தர் பயன்பாடு மற்றும் தேவைக்கு ஏற்ப, அனைத்து விலை பிரிவுகளிலும் அதிக லேப்டாப் மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இவைகளில் ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த லேப்டாப் மாடல்கள் எவை என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம். இந்த விலை பிரிவில் கிடைக்கும் மாடல்கள் கிட்டத்தட்ட சிறப்பான என்ட்ரி லெவல் பிரிவிலேயே நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
ஹெச்பி குரோம்புக்
ஹெச்பி குரோம்புக் 15.6 மாடல் இந்த பட்ஜெட்டில் வாங்குவதற்கு சிறப்பான மாடல் ஆகும். டிஸ்ப்ளே மற்றும் வெப்கேமரா தவிர்த்து, இந்த மாடலின் அம்சங்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்றதாகவே உள்ளது. இந்த லேப்டாப் இன்டெல் செலரான் V4500 பிராசஸர் கொண்டிருக்கிறது. இதன் விலை இந்திய சந்தையில் ரூ. 28 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது.
அசுஸ் விவோபுக் கோ 15
இன்டெல் செலரான் டூயல் கோர் பிராசஸர், 8 ஜிபி ரேம், 512 ஜிபி SSD கொண்டிருக்கும் அசுஸ் விவோபுக் கோ 15 மாடலில் சிறப்பான கீபோர்டு வழங்கப்பட்டு இருக்கிறது. 15.6 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் அசுஸ் விவோபுக் கோ 15 மாடலின் விலை ரூ. 27 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ்:
இந்த பட்டியலில் கிடைக்கும் ஸ்டைலிஷ் மாடலாக இந்த லேப்டாப் இருக்கிறது. 10th Gen இன்டெல் கோர் i3 பிராசஸர் கொண்டிருக்கும் இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் மாடலில் 15.6 இன்ச் டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள் உள்ளன. இதன் விலை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ரூ. 28 ஆயிரத்து 990 என்று துவங்குகிறது.
ஹெச்பி 255 G8
ஹெச்பி லேப்டாப் வாங்க திட்டமிடும் பட்சத்தில் இந்த மாடல் சிறப்பான தேர்வாக இருக்கும். இதில் AMD ரைசன் 3 சீரிஸ் CPU, 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப்பின் துவக்க விலை ரூ. 29 ஆயிரத்து 990 ஆகும்.
லெனோவோ ஐடியாபேட் 1
11.6 இன்ச் டிஸ்ப்ளேவுடன், இந்த பட்டியலில் சிறிய லேப்டாப் மாடலாக லெனோவோ ஐடியாபேட் 1 இருக்கிறது. சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கும் இந்த லேப்டாப் அன்றாட பணிகளுக்கு ஏற்றது ஆகும். இதில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் சூட், 4 ஜிபி ரேம், 256 ஜிபி SSD மற்றும் வின்டோஸ் 11 ஒஎஸ் உள்ளது. இதன் விலை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ரூ. 25 ஆயிரத்து 289 என்று துவங்குகிறது.