என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு டிடர்ஜெண்ட் சோப்பை அனுப்பி ஷாக் கொடுத்த ப்ளிப்கார்ட்
- ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் பெயரில் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
- இந்த சிறப்பு விற்பனையில் ஏராளமான பொருட்களுக்கு அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடி போன்ற பலன்கள் வழங்கப்படுகின்றன.
ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை சில தினங்களுக்கு முன் துவங்கியது. இந்த விற்பனையில் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான பொருட்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக மின்சாதனங்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. சிறப்பு விற்பனையில் லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு ப்ளிப்கார்ட் சார்பில் சோப் வினியோகம் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
இது பற்றிய தகவல் லின்க்டுஇன் தளத்தில் வெளியாகி இருக்கிறது. டெல்லியை சேர்ந்த மாணவர் ஒருவர் ப்ளிப்கார்ட் பிக் பில்லின் டேஸ் விற்பனையில் லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார். எனினும், லேப்டாப்பிற்கு பதில் அவருக்கு டிடர்ஜெண்ட் சோப்புகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இதை ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் மாணவர் தெரிவித்து இருக்கிறார். எனினும், இதற்கு பணம் திருப்பி தரப்பட மாட்டாது என ப்ளிப்கார்ட் அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.
அதன் பின் வெளியான தகவல்களில் ப்ளிப்கார்ட் இந்த வாடிக்கையாளருக்கு பணத்தை திரும்ப வழங்குவதற்கான பணிகளை துவங்கி இருப்பதாக தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் உள்ள "ஓபன் பாக்ஸ்" திட்டத்திலேயே இந்த மாணவர் லேப்டாப்பை வாங்கி இருக்கிறார். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர் பொருளை வாங்கும் போது, டெலிவரி செய்யும் நபர் கண் முன்னே அதனை திறந்து பார்க்க வேண்டும்.
பின் தான் ஆர்டர் செய்த பொருள் சரியாக இருப்பதை உறுதி செய்த பின் அதனை வாங்கிக் கொள்ளலாம். எனினும், இந்த மாணவர் ஆர்டர் செய்த லேப்டாப்பை அவரி்ன் தந்தை டெலிவரி ஊழியரிடம் இருந்து பெற்று இருக்கிறார். இதன் காரணமாக லேப்டாப்பிற்கு பதில் சோப்பு வைக்கப்பட்டு இருந்த சம்பவம் தாமதமாக தெரியவந்துள்ளது. மேலும் டெலிவரி செய்ய வந்த நபருக்கும் ஓபன் பாக்ஸ் திட்டம் பற்றிய தகவல் தெரிந்திருக்கவில்லை.