search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    5ஜியை தூக்கி சாப்பிடும் அம்சங்களுடன் 5.5ஜி சேவையை அறிமுகப்படுத்தும்  ஜியோ!
    X

    5ஜியை தூக்கி சாப்பிடும் அம்சங்களுடன் 5.5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் ஜியோ!

    • ஒன்பிளஸ் 13 சீரிஸ் அறிமுகத்தின் போது இந்த அறிவிப்பை ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது.
    • இதில் பயனர்கள் ஒரே நேரத்தில் பல நெட்வொர்க் செல்களுடன் [மல்டி-செல்] இணைப்பு ஏற்படுத்த முடியும்.

    நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ 5G தொழில்நுட்பத்தை கடந்த 2022 இல் அறிமுகப்படுத்தியது.

    இந்நிலையில் ஒன் பிளஸ் செல்போன் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி நெட்வொர்க்கின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான 5.5ஜியை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.

    ஒன்பிளஸ் 13 சீரிஸ் அறிமுகத்தின் போது இந்த அறிவிப்பை ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய போன் ஜியோவின் 5.5G அல்லது Jio 5GA சேவை செயல்படும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

    5G - 5.5G வித்தியாசம் என்ன?

    5G சேவையின் மேம்பட்ட பதிப்பு 5.5G என்று கூறப்படுகிறது. 5G உடன் ஒப்பிடும்போது 5.5G, சிறந்த இணைய வேகம், குறைந்த தாமதம் மற்றும் மேம்பட்ட நெட்வொர்க் கனெக்ஷனை வழங்குகிறது. இது 3GPP கீழ் உருவாக்கப்பட்டது.

    இதில் பயனர்கள் ஒரே நேரத்தில் பல நெட்வொர்க் செல்களுடன் [மல்டி-செல்] இணைப்பு ஏற்படுத்த முடியும்.

    வழக்கமாக ஒரு மொபைல் ஒரு டவரில் இருந்து சிக்னலை பெறும். அந்த டவரில் வலிமையான சிக்னல் கிடைக்கவில்லை என்றால் வேறு ஒரு டவருக்கு மாறும். ஆனால், 5.5ஜி தொழில்நுட்பத்தில் மொபைலால் ஒரே நேரத்தில் பல டவர்களில் இருந்து சிக்னலை பெறமுடியும்.

    இது வேகமான பதிவிறக்கம் மற்றும் தரவு பரிமாற்ற வேகத்தை உறுதி செய்கிறது. இந்த 5.5G நெட்வொர்க் மூலம் அதிகபட்சம் நொடிக்கு 10 ஜிபி வரை இணைய வேகத்தைப் பெறலாம். அப்லோட் வேகமும் நொடிக்கு 1 ஜிபி வரை இருக்கும்.

    ஒன பிளஸ் 13 அறிமுகத்தின் போது, 5.5G சேவையின் டெமோ வீடியோ காட்டப்பட்டது, இதில் டவுன்லோடிங் வேகம் 1014.96 Mbps ஆக ஜியோவின் நெட்வொர்க்கில் பதிவானது.

    வழக்கமான 5ஜி நெட்வோர்க்கில் நமது நாட்டில் நொடிக்கு 277.78 Mbps என்ற வேகத்தில் இணையம் கிடைக்கும். எனவே 5ஜி வேகத்தை விட 5.5ஜி வேகம் 380% அதிகமாகும். இதன்மூலம் 10 நொடிகளில் நம்மால் ஹெச்டி தரத்தில் 5 முழு படங்களை டவுன்லோட் செய்ய முடியும். இந்த 5.5ஜி சேவை வரும்காலங்களில் அனைத்து மற்ற ஸ்மாட்போன்களிலும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×