என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ரூ. 2 ஆயிரம் விலை குறைப்பு.. ரெட்மி பேட் வாங்க சூப்பர் சான்ஸ்
- ரெட்மி பேட் மாடலில் மீடியாடெக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
- இந்தியாவில் ரெட்மி பேட் மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி பேட் டேப்லெட் இந்திய விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ரெட்மி பிராண்டின் முதல் டேப்லெட் என்ற பெருமையுடன் ரெட்மி பேட் அறிமுகம் செய்யப்பட்டது.
பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி பேட் மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 8000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அறிமுகமாகி ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், ரெட்மி பேட் இந்திய விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.
புதிய விலை விவரங்கள்:
ரெட்மி பேட் (3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி) ரூ. 13 ஆயிரத்து 999
ரெட்மி பேட் (4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி) ரூ. 14 ஆயிரத்து 999
ரெட்மி பேட் (6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி) ரூ. 16 ஆயிரத்து 999
இதன் மூலம் ரெட்மி பேட் விலை அதிகபட்சம் ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ரெட்மி பேட் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என துவங்கியது. இதன் 4 ஜி.பி. ரேம் மற்றும் 6 ஜி.பி. ரேம் மாடல்களின் விலை ரூ. 17 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
விலை குறைப்பு மட்டுமின்றி ரெட்மி பேட் வாங்குவோர் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போதோ அல்லது மாத தவணை முறைகளை பயன்படுத்தும் போதோ அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ. நெட் பேங்கிங் பயன்படுத்தும் போது ரூ. 1500 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்டிற்கு மட்டும் ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை டிசம்பர் 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.