என் மலர்
தொழில்நுட்பம்
X
ஒப்போ நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்
Byமாலை மலர்2 March 2020 5:09 PM IST (Updated: 2 March 2020 5:09 PM IST)
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் என்கோ ஃபிரீ புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் என்கோ ஃபிரீ வயர்லெஸ் இயர்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய இயர்போனில் 13.4 எம்.எம். டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது ஆடியோ தரத்தில் சிறப்பான பேஸ் அனுபவத்தை வழங்குகிறது.
இத்துடன் ப்ளூடூத் 5.0 வசதி IPX4 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. டூயல் மேக்னெடிக் சர்கியூட் டிசைன் மற்றும் அல்ட்ரா டைனமிக் ஸ்பீக்கர்கள் கொண்ட உலகின் முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் இது என ஒப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது.
டூயல் மைக்ரோபோன்கள் கொண்ட புதிய ஒப்போ இயர்போன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நாய்ஸ் ரிடக்ஷன் வழங்குகிறது. இத்துடன் வால்யூம் மற்றும் பாடல்களை இயக்க டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் வழங்கப்பட்டுள்ள இயர்டிப்களில் பயனருக்கு கச்சிதமாக பொருந்தும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் கொண்டிருக்கும் ஒப்போ என்கோ ஃபிரீ வயர்லெஸ் இயர்போன் ஒரு முறை சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் பயன்படுத்தும் போது 25 மணி நேரத்திற்கு பேக்கப் பெற முடியும்.
ஒப்போ என்கோ ஃபிரீ வயர்லெஸ் இயர்போன் சிறப்பம்சங்கள்:
- ப்ளூடூத் 5.0
- ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். சாதனங்களுடன் இணைந்து இயங்கும்
- 13.4 எம்.எம். டிரைவர்
- வால்யூம், கால் கண்ட்ரோல் மற்றும் பாடல்களை மாற்ற டச் கண்ட்ரோல் வசதி
- டூயல் மைக்ரோபோன்
- இன்ஃப்ராரெட் சென்சார்
- 120ms லோ-லேடென்சி
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IPX4)
- 31 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- யு.எஸ்.பி. டைப்-சி
ஒப்போ என்கோ ஃபிரீ வயர்லெஸ் இயர்போன் பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
X