என் மலர்
தொழில்நுட்பம்
X
புதிய உச்சம் தொட்ட டிம் குக் சொத்து மதிப்பு
Byமாலை மலர்13 Aug 2020 10:57 AM IST (Updated: 13 Aug 2020 10:57 AM IST)
ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் சொத்து மதிப்பு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் சந்தை மதிப்பு 1 ட்ரில்லியன் (அதாவது ஒரு லட்சம் கோடி) அமெரிக்க டாலர்களை தாண்டியது. இதன் காரணமாக ஆப்பிள் தலைமை செயல் அதிகாரியான டிம் குக்கின் சொத்து மதிப்பு முதல் முறையாக 100 கோடி அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தில் 8,47,969 பங்குகளை டிம் குக் வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு தனது சம்பளத்தின் பகுதியாக டிம் குக் 12.5 கோடி டாலர்களை டிம் குக் பெற்றார். கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு 10 ஆயிரம் கோடி டாலர்களாக அதிகரித்தது.
ஆப்பிள் மட்டுமின்றி பேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களின் சொத்து மதிப்பும் கொரோனாவைரஸ் பாதிப்பு காலக்கட்டத்தில் பலமடங்கு அதிகரித்தது. மக்கள் பெரும்பாலும் ஆன்லைனில் நேரத்தை கழித்ததே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
தற்சமயம் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு முதல் முறையாக 2 ட்ரில்லியன் (அதாவது இரண்டு லட்சம் கோடி) அமெரிக்க டாலர்களை தாண்ட இருக்கிறது. இரு ஆண்டுகளுக்கு முன் 1 ட்ரில்லியன் சந்தை மதிப்பு கொண்ட முதல் நிறுவனமாக ஆப்பிள் உருவெடுத்தது.
Next Story
×
X