என் மலர்
டென்னிஸ்

X
டேனில் மெத்வதேவ்
துபாய் ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டம் வென்றார் மெத்வதேவ்
By
மாலை மலர்5 March 2023 1:03 AM IST

- துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவின் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.
- இதில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரர் ஆந்த்ரே ரூப்லெவை வீழ்த்தினார்.
துபாய்:
துபாய் ஓபன் சர்வதேச ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரர் ஆந்த்ரே ரூப்லெவுடன் மோதினார்.
இதில் மெத்வதேவ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ரூப்லெவை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
ஏற்கனவே, மெத்வதேவ் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை அரையிறுதியில் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மெத்வதேவ் இந்த ஆண்டில் ரோட்டர்டாம், தோஹா மற்றும் துபாய் என தொடர்ச்சியாக 3 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
Next Story
×
X