என் மலர்tooltip icon
    • கடந்த ஜனவரியில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
    • அவை அரசியல் நோக்கம் கொண்டவை என்பது தெளிவாகும்.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த 2023 முதல் சிறையில் உள்ளார். கடந்த ஜனவரியில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

    இந்நிலையில் தங்கள் தந்தைக்கு மரண ஆபத்தில் இருப்பதாகவும், அவரை காப்பாற்றுமாறும் இம்ரான் கானின் மகன்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    லண்டனில் வசிக்கும், இம்ரானின் மகன்கள் சுலைமான் கான் மற்றும் காசிம் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசும்போது, தங்கள் தந்தையை விடுவிக்க டிரம்பிடம் கேட்போம் என்று கூறினர்.

    தங்கள் தந்தை குறைந்தபட்ச உரிமைகள் கூட இல்லமால் இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

    மேலும் இம்ரான் கான் சிறைச் சூழல் குறித்து பேசிய அவர்கள், "அவர் ஒரு மரண அறையில் இருக்கிறார், வெளிச்சம் இல்லை, வழக்கறிஞர் இல்லை, மருத்துவர் இல்லை, இருப்பினும் அவர் உடைந்து போகவில்லை" என்று தெரிவித்தனர்.

    தொடர்ந்து பேசுகையில், அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஆராய்ந்தால், அவை அரசியல் நோக்கம் கொண்டவை என்பது தெளிவாகும்.

    ஜனநாயகத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் ஆதரிக்கும் எந்தவொரு அரசாங்கமும் எங்கள் தந்தையை விடுவிக்க ஆதரிக்கும். குறிப்பாக உலகின் மிகவும் பிரபலமான தலைவரான டிரம்ப்பின் உதவியை நாடுவோம்" என்று கூறினர்.  

    • துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சகோதரத்துவம் உண்மையான நட்புக்கு ஒரு சான்றாகும்.
    • பாகிஸ்தான்-துருக்கி நட்புறவு நீடூழி வாழ்க!

    இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த துருக்கி நாட்டுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் பாகிஸ்தான் எங்களின் உண்மையான நண்பன் என்றும், எதிர்காலத்தில் அந்த நாட்டிற்கு நாங்கள் தொடர்ந்து துணை நிற்போம் என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    போர் நிறுத்தத்திற்கு குரல் கொடுத்த துருக்கிக்கு பாகிஸ்தான் நன்றி தெரிவித்த பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பைப் பாராட்டி எர்டோகன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

    எர்டோகன் தனது அறிக்கையில், "எனது அன்பு நண்பர் ஷேபாஸ் ஷெரீப் அவர்களே, துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சகோதரத்துவம் உண்மையான நட்புக்கு ஒரு சான்றாகும். உலகில் ஒரு சில நாடுகள் மட்டுமே இத்தகைய உறவை பேணுகின்றன. துருக்கியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நாங்கள் விரும்புவது போல, பாகிஸ்தானிலும் அதை விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.

    சர்ச்சைகளைத் தீர்ப்பதில் பேச்சுவார்த்தை மற்றும் சமரசத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் கொள்கையைப் பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.

    மேலும் "கடந்த காலங்களில் நல்ல மற்றும் கெட்ட காலங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நாங்கள் நின்றது போல, எதிர்காலத்திலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்போம். பாகிஸ்தான்-துருக்கி நட்புறவு நீடூழி வாழ்க!" என்று எர்டோகன் தெரிவித்தார்.

    • மறுக்க முடியாத யதார்த்தத்தை இதுபோன்ற பெயரிடுதல் மாற்ற முடியாது
    • அருணாச்சலப் பிரதேசம் நேற்று, இன்று, நாளை என எப்போதும் இந்தியாவின் ஒரு மாநிலமாகும்.

    அருணாச்சலப் பிரதேசத்தின் இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்ற சீனா முயற்சிப்பதை இந்தியா கண்டித்துள்ளது.

    வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள இடங்களுக்குப் பெயரிட சீனா பயனற்ற மற்றும் அபத்தமான முயற்சிகளை மேற்கொண்டு வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்தியா அத்தகைய முயற்சிகளை முற்றிலுமாக நிராகரிக்கிறது" என்று ஜெய்ஸ்வால் கூறினார்.

    அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்ற மறுக்க முடியாத யதார்த்தத்தை இதுபோன்ற பெயரிடுதல் மாற்ற முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.

    இதுதொடர்பாக பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "அருணாச்சலப் பிரதேசம் நேற்று, இன்று, நாளை என எப்போதும் இந்தியாவின் ஒரு மாநிலமாகும். பெயரை மாற்றுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது" என்று கூறினார்.

    • மார்க் கார்னி அமைச்சரவையில் பாதி பேர் பெண்கள் ஆவர்.
    • கனடாவில் கேபினட் அமைச்சரான முதல் இந்து ஆவார்.

    கனடாவின் புதிய வெளியுறவு அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த், பிரதமர் மார்க் கார்னியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, மெலனி ஜோலிக்குப் பதிலாக அனிதா ஆனந்த் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

    முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையைப் போலவே, மார்க் கார்னி அமைச்சரவையில் பாதி பேர் பெண்கள் ஆவர்.

    ஏப்ரல் 28 அன்று நடைபெற்ற கனேடிய பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 22 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் நான்கு பேர் மார்க் கார்னியின் அமைச்சரவை உறுப்பினர்கள்.

    அனிதா ஆனந்த் கனடாவில் கேபினட் அமைச்சரான முதல் இந்து ஆவார். கனடாவின் பிறந்து வளர்ந்த அனிதா ஆனந்த் (58 வயது), 2019 இல் அரசியலில் நுழைந்தார்.

    • கொல்லபட்ட மாவோயிஸ்டுகள் தலைகளுக்கு மொத்தம் 1.72 கோடி ரூபாய் பரிசுத்தொகை இருந்தது.
    • இந்த நடவடிக்கையின்போது 18 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்

    தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் எல்லையில் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

    உசுரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்ரேகுட்டாவில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் மொத்தம் 31 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக சிஆர்பிஎஃப் டிஜி ஜிபி சிங் மற்றும் சத்தீஸ்கர் டிஜிபி அருண்தேவ் கவுதம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தனர்.

    சுமார் 21 நாட்கள் நீடித்த இந்த  தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்ட 31 மாவோயிஸ்டுகளில் 16 பேர் பெண்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொல்லபட்ட மாவோயிஸ்டுகள் தலைகளுக்கு மொத்தம் 1.72 கோடி ரூபாய் பரிசுத்தொகை இருந்தது. இந்த நடவடிக்கையின்போது 18 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவிதித்தனர். சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்புப் படையினர் 35 அதிநவீன ஆயுதங்களையும் மீட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

     

    • டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று கூறுகிறார்.
    • தன்னை கொடூரமாக நடத்தியவர்கள் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்

    அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள புதானா கிராமத்தை சேர்ந்தவர் 17 வயதான கஃபி (Kafi).2011 ஆம் ஆண்டு தனது மூன்று வயதில் கஃபி ஆசிட் வீச்சுக்கு ஆளாகி பார்வையை இழந்தார்.

    மூன்று வயதில் இருந்தே பல்வேறு சிரமங்களை சந்தித்த கஃபி தற்போது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.6 சதவீத மதிப்பெண்களுடன் தனது பள்ளியில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

    சண்டிகரில் செக்டார் 26 இல் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் அவர் பயின்று வந்தார். ஆடியோ புக்குகள் மூலம் அங்கு கற்பிக்கப்பட்டது.

    கடினமான பாதைகளை கடந்து சாதனை புரிந்துள்ள கஃபி டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று கூறுகிறார்.

    ஏற்கனவே டெல்லி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை எழுதி முடித்த கஃபி சீட் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.

    ஊடகத்துக்குப் பேட்டியளித்த கஃபி தன் மீதான ஆசிட் தாக்குதல் குறித்து பேசுகையில், மூன்று அண்டை வீட்டார் தன் மீது அமிலத்தை ஊற்றியதாகத் தெரிவித்தார்.

    மேலும் "மருத்துவர்கள் என் உயிரைக் காப்பாற்றினர், ஆனால் அவர்கள் என் பார்வையைக் காப்பாற்றவில்லை. ஆசிட் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. தன்னை கொடூரமாக நடத்தியவர்கள் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்" என்று கஃபி கூறினார்.

    • மேற்குப் பகுதி நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றின் நீரை பாகிஸ்தாம் பயன்படுத்தலாம்.
    • கிழக்குப் பகுதி நதிகளான சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆகியவற்றின் நீரை இந்தியா பயனப்டுத்துகிறது.

    சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முடக்குவதற்கான இந்தியாவின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானின் நீர்வள அமைச்சகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

    ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, 1960 ஆம் ஆண்டு உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் மேற்கொள்ளப்பட்ட நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலகியது. பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் வலுவான நிலைப்பாட்டை எடுக்கும் வரை ஒப்பந்தத்தை முடக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

    இந்த ஒப்பந்தத்தின்படி, கிழக்குப் பகுதி நதிகளான சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆகியவற்றின் நீரை இந்தியாவும், மேற்குப் பகுதி நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றின் நீரை பாகிஸ்தானும் பயன்படுத்தலாம்.

    ஆனால் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு. பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்வது படிப்படியாக முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் கூறினார்.

    மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும், நதி நீர் ஒப்பந்தம் குறித்த தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என இந்தியா தெரிவித்தது.

    இந்நிலையில் வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பிய கடிதத்தில், இந்தியாவின் இந்த முடிவு பாகிஸ்தானில் நெருக்கடியை உருவாக்கும் என்று பாகிஸ்தான் நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன்கள் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கியது.
    • இந்தியாவின் தேசிய நலன்களுக்கு மாறாக, துருக்கி பாகிஸ்தானை ஆதரிக்கிறது.

    தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகத் துருக்கியில் உள்ள இனோனு பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தங்களை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முறித்துக் கொண்டுள்ளது.

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன்கள் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கியதால் அந்நாட்டின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இந்த சூழலில் அந்நாட்டு பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது பற்றிய தகவல் JNUவின் X கணக்கில் அறிவிக்கப்பட்டது.

    இரு பல்கலைக்கழகங்களுக்கிடையேயான கல்வி ஒத்துழைப்பை குறிக்கோளாக கொண்டு பிப்ரவரி 3, 2025 அன்று கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம் பிப்ரவரி 2, 2028 அன்று காலாவதியாக இருந்தது.

    ஆனால் தற்போது இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள JNU பல்கலை., பரிமாற்றத் திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்கள் எந்த சிரமங்களையும் சந்திக்காமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.

    இந்தியாவின் தேசிய நலன்களுக்கு மாறாக, துருக்கி பாகிஸ்தானை ஆதரிப்பதால் 'துருக்கி புறக்கணிப்பு' என்ற பதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

    • கூட்டத்தில் தரூரின் சமீபத்திய அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • 1971-ல் இந்தோ பாக் போரின் போது இந்திரா காந்தி அமெரிக்க அழுத்தத்தை எதிர்த்தார்.

    இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து காங்கிரஸின் நிலைப்பாட்டை எதிர்த்ததற்காக எம்.பி. சசி தரூரை காங்கிரஸ் கட்சித் தலைமை எச்சரித்துள்ளது.

    தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்த இது நேரமில்லை என்றும், கட்சியின் கருத்துக்களைப் பொதுமக்களிடம் முன்வைக்க வேண்டும் என்றும் தலைமை தரூருக்கு புத்திமதி வழங்கி உள்ளது.

    டெல்லியில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. தரூரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் தரூரின் சமீபத்திய அறிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணான தனிப்பட்ட முறையில் அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று கூட்டத்தில் சசி தரூருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பாகிஸ்தானுடன் இந்தியா மோதல், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட சண்டை நிறுத்தம் ஆகியவை தொடர்பாக சசி தரூரின் கருத்துக்கள் காங்கிரஸ் தலைமையின் கருத்துக்கு முரணாக அமைத்திருந்தன.

    1971-ல் இந்தோ பாக் போரின் போது இந்திரா காந்தி அமெரிக்க அழுத்தத்தை எதிர்த்தார். அதே வேளை தற்போதைய சூழலில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மோடி இணங்கியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.

    ஆனால் இந்திரா காந்தி இருந்தபோது நிலைமை வேறு, இப்போது சூழ்நிலை வேறு என்றும், அமெரிக்காவின் அழுத்தம் குறித்தும் காங்கிரசின் கருத்துக்கு முரணான கருத்துக்களை சசி தரூர் ஊடகங்களிடம் கூறினார்.

    மேலும் அண்மைக் காலமாகவே பிரதமர் மோடி, மற்றும் பாஜக அரசு செயல்பாடுகளை புகழும் விதமாக சசி தரூர் பேசி வருகிறார். இதன் பின்னணியிலேயே காங்கிரஸ் சசி தரூரை கண்டித்துள்ளது. 

    • 'தக் லைப்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் வெளியிடப்பட்டது.
    • 'தக் லைப்' படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.

    'தக் லைப்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் வெளியிடப்பட்டது. பாடல் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.

    அதில், கமல் மற்றும் சிம்பு நடனமாடும் காட்சிகள் ஹைலைட். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    'தக் லைஃப்' படத்தின் இசை வெளியீட்டு விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

    இசை வெளியீட்டு விழா, சென்னையில் மே 16ம் தேதி நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், எல்லையில் நிலவி வந்த போர் பதற்ற சூழல் காரணமாக இந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், 'THUG LIFE' படத்தின் இசை வெளியீட்டு விழா மே 24ம் தேதி சென்னையில் நடைபெறும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் 17ம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×