என் மலர்
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது.
- இதன் இறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனை சோபியா கெனின் உடன் மோதினார்.
ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய ஜெசிகா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
கடந்த வாரம் நடந்த மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சபலென்காவிடம் தோற்ற ஜெசிகா பெகுலா 2வது இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது.
- குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சிராஜ் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஐதராபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய குஜராத் அணி 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 3வது வெற்றியைப் பதிவு செய்தது.
இந்நிலையில், ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் முகமது சிராஜ் 4 ஓவர் வீசி 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். மேலும், இந்தப் போட்டியின் மூலம் ஐ.பி.எல். தொடரில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையையும் படைத்திருக்கிறார்.
மேலும், 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் தனது சிறந்த பந்துவீச்சையும் சிராஜ் பதிவுசெய்திருக்கிறார்.
- ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.
- தோனி இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் அதிரடியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
சென்னை:
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
இதில் எம்.எஸ்.தோனி இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் அணியின் வெற்றிக்காக அதிரடியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் உள்ளது. இதையடுத்து தோனி ஓய்வுபெற வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் தோனி ஓய்வுபெற வேண்டும் என நேரடியாக தெரிவித்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக சேஸிங் செய்ய வேண்டிய சூழ்நிலையில் தோனி மிகவும் நிதானமாக ஆடி வந்தார். அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த மேத்யூ ஹைடன், "
இதுதொடர்பாக மேத்யூ ஹைடன் கூறுகையில், இந்தப் போட்டிக்குப் பிறகு தோனி வர்ணனையாளர்கள் குழுவுடன் இணைய வேண்டும். அவர் கிரிக்கெட்டை தொலைத்து விட்டார். இனி அவ்வளவுதான். இந்த உண்மையை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலக வேண்டிய காலம் எப்போதோ வந்துவிட்டது என தெரிவித்தார்.
ஹைடனின் இந்த விமர்சனம் தோனி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.
- இதனால் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
காசா:
காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 18-ம் தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 5 பேர் குழந்தைகள் என்றும், 12 பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 152 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய குஜராத் 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐதராபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. நிதிஷ்குமார் ரெட்டி 31 ரன்னும், கிளாசன் 27 ரன்னும், கம்மின்ஸ் 22 ரன்னும் எடுத்தனர்.
குஜராத் சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. சுப்மன் கில் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 61 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 49 ரன்னில் அவுட்டானார்.
ரதர்போர்டு 16 பந்தில் 35 ரன்கள் குவித்தார்.
இறுதியில், குஜராத் அணி 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 3வது வெற்றியைப் பதிவு செய்தது. நடப்பு தொடரில் ஐதராபாத் அணி பெறும் 4வது தோல்வி இதுவாகும்.
- மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
- இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
மாண்டே கார்லோ:
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற உள்ளது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ-சிலியின் அலெஜாண்ட்ரோ ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-3, 7-5 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
நாளை மறுதினம் நடைபெறும் 2வது சுற்றில் போபண்ணா ஜோடி, இத்தாலி ஜோடியுடன் மோதுகிறது.
- மாநில உரிமைகளைப் பற்றி பேச ஸ்டாலினுக்கோ, திமுகவுக்கோ கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா?
- இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்திற்கு பாடனா சென்ற போது மாநில உரிமைகள் பற்றி ஏதாவது பேசினாரா?
அதிமுக யாருடன் கூட்டணி செல்ல வேண்டும், என்ன கோரிக்கை வைக்க வேண்டும் னெ திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு அக்கறை ? என அதிமுக தலைமை கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
அஇஅதிமுக யாருடன் கூட்டணி செல்லவேண்டும், என்ன கோரிக்கை வைக்க வேண்டும் என்பதில் திமுக தலைவராக இருக்கக் கூடிய ஸ்டாலினுக்கு என்ன இவ்வளவு அக்கறை? ஆடு நனைகிறதே என இந்த ஓநாய் அழுவது ஏன்?
முதலில், மாநில உரிமைகளைப் பற்றி பேச ஸ்டாலினுக்கோ, திமுகவுக்கோ கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா?
இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்திற்கு பாடனா சென்ற போது மாநில உரிமைகள் பற்றி ஏதாவது பேசினாரா?
அல்லது, இரண்டாவது கூட்டத்திற்காக பெங்களுரு சென்றாரே- அப்போது காவிரி நீர் வராமல் இரண்டாம் போகம் விவசாயம் செய்யமுடியாமல் விவசாயிகள் அவதியுற்றதை கருத்திற்கொண்டு, தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமை குறித்து பேசிவிட்டு வந்தாரா?
அவ்வளவு ஏன், தென் தமிழ்நாடே வெள்ளத்தில் தத்தளித்த போது, தனக்கு வாக்களித்த மக்களைக் காக்க வக்கில்லாமல், இந்தியாவைக் காக்கப் போகிறேன் என்று டெல்லியில் நடைப்பெற்ற இந்தியா கூட்டணியின் கூட்டத்திற்கு சென்றாரே- அப்போதாவது தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் பற்றி எதாவது பேசினாரா? கண்டுகொண்டாரா?
இப்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு தான் இருக்கிறது. "காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை வழங்கினால் மட்டும் தான் காங்கிரஸ் உடன் கூட்டணி" என்று வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா மு.க.ஸ்டாலின் ?
நீட் தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்திவிட்டு, அதை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடியது எந்தக் கூட்டணி? அந்தக் கூட்டணியில் தானே இன்று வரை இவர்கள் அங்கம் வகித்துக் கொண்டு இருக்கிறார்கள்? இதை விட ஸ்டாலினும் திமுகவும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு செய்யக் கூடிய மாபெரும் துரோகம் என்று ஏதாவது உள்ளதா?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பற்றியோ, அதிமுக
பற்றியோ பேச என்ன அருகதை இருக்கிறது இவருக்கு?
"ரகசியம் இருக்கிறது" என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு, இப்போது என்ன செய்வது என்றுத் தெரியாதவர் அரங்கேற்றும் இந்த "ஊட்டி நாடகத்தை" மக்கள் யாரும் நம்பப் போவது இல்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அரசாங்கம் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது
- அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடுவதற்காக மகாபஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டுள்ளன.
பஞ்சாப் விவசாய தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் 131 நாட்களாக நடத்தி வந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முடித்துக் கொண்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குறிப்பாக பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக உத்தரவாதம் செய்ய வலியுறுத்தி அவர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
இருப்பினும் மத்திய அரசு கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் அவரின் போராட்டம் தொடர்ந்து வந்தது. 70 வயதான அவர் ஏற்கனவே உடல்நலப்பிரச்னைகளுடன் இருந்த நிலையில் உண்ணாவிரதத்தால் அவரின் உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவனமயில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று பஞ்சாபின் பதேகர் சாஹிப் மாவட்டத்தில் உள்ள சிர்ஹிந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கிசான் மகாபஞ்சாயத்தின் போது ஜக்ஜித் சிங் தல்லேவால் தனது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்தார்.
கூட்டத்தில் பேசிய அவர், பஞ்சாப் மற்றும் முழு நாட்டையும் சேர்ந்த விவசாயிகள் ஆதரவாளர்களின் வேண்டுகோளின் பேரில், இன்று எனது சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர முழு மனதுடன் முடிவு செய்துள்ளேன். ஆனால் போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார். போராட்டதின் வடிவம் வேறுபட்டிருக்கலாம், ஆனால் அது முடிந்துவிடவில்லை என்று அவர் கூறினார்.

மேலும் மத்திய மற்றும் மாநில அரசை விமர்சித்து பேசிய அவர், ஒருபுறம் அரசாங்கம் எங்களை ஒரு கூட்டத்திற்கு அழைக்கிறது என்றும் மறுபுறம் எங்கள் போராட்டம் இரவில் வலுக்கட்டாயமாக கலைக்கப்படுகிறது. அரசாங்கம் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது. அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடுவதற்காக மகாபஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டுள்ளன.
முன்னதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதவில், விவசாயிகள் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலை உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் முன்னரே திட்டமிடப்பட்ட தேதியின்படி மே 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாய அமைப்புகளுடன் மீண்டும் ஒரு சந்திப்பை நடத்துவதாக உறுதியளித்தார். தல்லேவால் தற்போது மருத்துவமனையில் இருந்து திரும்பிவிட்டதாகவும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசின் பிரதிநிதிகளுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று உறுதியளித்தார்.
கடைசியாக கடந்த மார்ச் 19 அன்று மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
- 19-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதுதியுள்ளது.
- ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடைபெறும் 19-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதியுள்ளது.
இரவு 7.30 மணிக்கு ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இதில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக நிதீஷ் குமார் ரெட்டி- 31, ஹென்ரிச் க்ளாசன்- 27, கம்மின்ஸ்- 22, அபிஷேக் ஷர்மா- 18 ரன்களும் எடுத்தனர்.
குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சில் சிராஜ்- 4, பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆட்டத்தின் முடிவில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 153 ரன்களை சன்ரைசர்ஸ் ஐதராபாத் இலக்காக நிர்ணயித்துள்ளது.
- ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சிங்கள இராணுவம் கொன்றது.
- இது இலங்கை அரசுடன் போடப்பட்டிருக்கும் முதல் ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்.
பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தில், திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துவதில் ஒத்துழைப்புக்காக இந்தியா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் அனுரா திசநாயகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். மேலும் இந்தியா - இலங்கை இடையே ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அதில் முக்கியமானது, இந்தியா - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.
இதன் அடிப்படையில், இந்திய ராணுவம் மற்றும் இலங்கை ராணுவத்திற்குமிடையே கூட்டு நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பும் உதவியும் வழங்கும். இது இலங்கை அரசுடன் போடப்பட்டிருக்கும் முதல் ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேரை கொன்று குவித்தது இலங்கை ராணுவம்தான்.
ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சிங்கள இராணுவம் கொன்றது. தங்கள் மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான வீரர்களை பலி கொடுத்து தாயகத்தை மீட்பதற்குப் போராடிய விடுதலை இயக்கத்தைக் கருவறுத்தது சிங்கள ராணுவம். யுத்தக் களத்தில் போராடிய தமிழ் வாலிபர்கள் எட்டு பேரை நிர்வாணப்படுத்தி, கைகளைக் கட்டி பின்னந்தலையில் சிங்கள ராணுவ வெறியர்கள் சுட்டுக் கொன்றனர்.
இனப்படுகொலை நடத்திய சிங்கள ராணுவத்தை ஹேக் நகரில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, விசாரித்து தண்டிக்க வேண்டும் என்று தமிழ் இனம் போராடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இலங்கை இராணுவத்தோடு பிரதமர் நரேந்திர மோடி ராணுவ ஒப்பந்தம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமின்றி தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் கொடும் துரோகம் ஆகும். தமிழ் இனத்தை வஞ்சித்திருக்கும் பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷன்' விருது வழங்கப்பட்டிருப்பதும் பொருத்தமானது என்றுதான் தமிழ் மக்கள் கருதுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.