என் மலர்
- பஹல்காம் தாக்குதல் உலக நாடுகளை உலுக்கியுள்ளது.
- இதைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற மக்களை மதத்தின் பெயரால் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் படுகொலை செய்த கொடூரம் உலக நாடுகளையே உலுக்கியுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தான், வங்கசேத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளைத் தொடர்ந்து அடையாளம் கண்டு வெளியேற்றுவதிலும் தமிழக அரசு மும்முரமாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ராணுவத்தின் மீதும் தேச பாதுகாப்பின் மீதும் வதந்திகளைக் கிளப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பா.ஜ.க. சார்பில் திங்கட்கிழமை கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கேலோ இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
- அப்போது பேசிய அவர், பீகார் மண்ணின் மகன் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடினார் என்றார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நான் ஐ.பி.எல். தொடர் பார்த்தேன். பீகார் மண்ணின் மகன் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடினார். இந்த இளம் வயதில் அவர் பெரிய சாதனையை படைத்துள்ளார்.
இந்த சாதனையின் பின்னணியில் அவரது கடின உழைப்பு உள்ளது. அவர் தனது திறமையை வெளிக்கொண்டு வர பல போட்டிகளில் விளையாடியுள்ளார்.
நீங்கள் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் பிரகாசிப்பீர்கள். முடிந்தவரை விளையாட்டு போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எப்போதும் விளையாட்டுத் துறைக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
புதிய கல்வி கொள்கையான தேசிய கல்வி கொள்கையில் விளையாட்டை கல்வியின் ஒரு பகுதியாக மாற்றி உள்ளோம். நாட்டில் நல்ல வீரர்களுடன் சிறந்த விளையாட்டு நிபுணர்களை உருவாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என தெரிவித்தார்.
பீகாரின் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஐ.பி.எல். தொடரில் விளையாடும் இளம் வீரர் என்ற பெருமையை சூர்யவன்ஷி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அமெரிக்கா சென்று மாணவர்களிடம் பேசினார்.
- அப்போது, பேசிய ராகுல் காந்தி, ராமர் ஒரு புராண கதாபாத்திரம் என்றார்.
புதுடெல்லி:
மக்களவை லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இரு வாரத்துக்கு முன் அமெரிக்கா சென்றார். அங்கு பிரவுன் பல்கலைக்கழக மாணவர்களிடத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
இந்தியாவின் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகள், அரசியல் சிந்தனையாளர்களாக விளங்கிய புத்தர், குருநானக், கர்நாடகாவின் பசாவா, கேரளாவின் நாராயண குரு, ஜோதிராவ் புலே, மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் மதவெறி பிடித்தவர்கள் அல்ல.
அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டும் என்றே அவர்கள் போதித்தனர். ராமர் போன்ற புராண கதாபாத்திரங்களும் அதை தான் போதித்தன. அவர் மன்னிப்பவராக, இரக்கம் உள்ளவராக இருந்தார். ஆனால் பா.ஜ.க.வின் கருத்தை இந்து கருத்தாக நான் பார்க்கவில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில், ராமரை புராண கதாபாத்திரம் என ராகுல் காந்தி கூறியதற்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் செஷாத் பூனாவாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிந்துக்களையும், ராமரையும் அவமதிப்பது காங்கிரஸ் கட்சியின் அடையாளமாக மாறிவிட்டது. ராமர் கோவில் கட்டுவதை எதிர்த்த அவர்கள் பாகிஸ்தானின் மொழியையே வெளிப்படுத்துகின்றனர். ராமருக்கும், இந்துக்களுக்கும் எதிரான இவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என குற்றம் சாட்டினார்.
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
- இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது பஞ்சாப் அணி.
தரம்சாலா:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நேற்று நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 236 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் எழுச்சி பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி அசத்தியது.
முதல் இடத்தில் ஆர்.சி.பி.யும், 3வது இடத்தில் மும்பை இந்தியன்சும், 4வது இடத்தை குஜராத்தும், 5வது இடத்தை டெல்லியும் பிடித்துள்ளது.
லக்னோ அணி 11 போட்டியில் 5 வெற்றி, 6 தோல்வி என 7வது இடத்தில் உள்ளது.
- ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது.
- முதலில் ஆடிய பஞ்சாப் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது.
தரம்சாலா:
ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது. பிரப்சிம்ரன் சிங் 91 ரன்களை விளாசினர். அடுத்து இறங்கிய லக்னோ 20 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. பொறுப்புடன் ஆடிய பதோனி அரை சதம் கடந்து 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், தோல்விக்கு பிறகு லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:
பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது. அடுத்த 3 போட்டியில் வெற்றி பெற்றால், நிச்சயமாக அற்புதமான விஷயங்களைச் செய்ய முடியும்.
236 ரன்கள் என்பது துரத்துவதற்கு மிக அதிகம். பீல்டிங்கும் சரியாக இல்லை. நிச்சயமாக அதிக ரன்கள். தவறான நேரத்தில் முக்கியமான கேட்சுகளை தவறவிட்டால், அது உங்களை மோசமாக பாதிக்கும். அது இன்னும் அதிகமாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம்.
நாங்கள் தொடக்கத்தில் சரியான நீளத்தை தேர்வு செய்யவில்லை. ஆனால் அது விளையாட்டின் ஒரு பகுதி. டாப் ஆர்டர் நன்றாக பேட்டிங் செய்யும்போது அது அர்த்தமுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும், அவர்கள் வெளியே வருவார்கள் என நம்ப முடியாது. இது விளையாட்டின் ஒரு பகுதி என தெரிவித்தார்.
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்றது.
- நார்வே வீரர் காஸ்பர் ரூட் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், பிரிட்டன் வீரர் ஜாக் டிராபர் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 7-5 என காஸ்பர் ரூட் கைப்பற்றினார். பதிலுக்கு டிராபர் 2வது செட்டை 6-3 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என காஸ்பர் ரூட் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் கிட்டத்தட்ட 2 ஆண்டை நெருங்கியுள்ளது.
- போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
புதுடெல்லி:
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் கிட்டத்தட்ட 2 ஆண்டை நெருங்கியுள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனாலும், இருதரப்பினரும் பரஸ்பர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, இஸ்ரேலின் முக்கிய விமான நிலையம் மீது ஏமனைச் சேர்ந்த ஹவுதி பயங்கரவாத அமைப்பினர் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் உயிர்ச்சேதம் ஏற்படாத நிலையில், சாலைகள், வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஹவுதி ஏவுகணையை தாக்கி அழிப்பதில் ராணுவம் தோல்வியடைந்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க தயாராக இருந்த ஏர் இந்திய விமானம், கடைசி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அபுதாபிக்கு திருப்பி விடப்பட்டது.
டெல் அவிவ் நகரில் இருந்து டெல்லி இயக்கப்பட இருந்த விமானத்தையும் ரத்துசெய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
- டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 236 ரன்களை குவித்தது.
தரம்சாலா:
ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது. பிரப்சிம்ரன் சிங் 91, ஷ்ரேயாஸ் அய்யர் 45, ஷஷாங் சிங் 33, ஜோஷ் இங்லிஸ் 30 ரன்களை விளாசினர்.
இதையடுத்து, 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. பஞ்சாப் அணியின் துல்லிய பந்து வீச்சால் பவர் பிளேவில் முக்கிய மூன்று விக்கெட்டுகளை இழந்தது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
லக்னோ அணி 78 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தத்தளித்தது
6வது விக்கெட்டுக்கு ஆயுஷ் பதோனியுடன், அப்துல் சமத் ஜோடி சேர்ந்தார். 81 ரன்கள் சேர்த்த நிலையில் சமத் 45 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய பதோனி அரை சதம் கடந்து 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.
- சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
- காயம் காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து மேக்ஸ்வெல் விலகினார்.
புதுடெல்லி:
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 53 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.
இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. கடந்த சீசன்களில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பஞ்சாப் கிங்ஸ் தற்போது ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் சிறப்பாக ஆடி வருகிறது.
நடப்பு சீசனில் பஞ்சாப் அணியில் இடம்பிடித்திருந்த ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டர் மிட்செல் ஓவனை ரூ.3 கோடிக்கு பஞ்சாப் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
- அத்தனை அதிகாரங்களையும் திமுக பெற்றது "நீட் தேர்வு ரத்து" என்ற வாக்குறுதியால் தானே?
- இத்தனை மாணவ- மாணவியரின் மரணங்களுக்கு உரிய நீதியை,மக்கள் நிச்சயம் வழங்குவார்கள்!
நீட் தேர்வு ரத்து என்ற பொய்யால் 21 மாணவர்கள் உயிர் பறிபோய் இருக்கிறது, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இப்போது கூட மனசாட்சி உறுத்தவில்லையா ? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வௌயிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே கயல்விழி என்ற மாணவி நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி, நாடாளுமன்றத்தில் 39 எம்.பி.க்கள் என அத்தனை அதிகாரங்களையும் திமுக பெற்றது "நீட் தேர்வு ரத்து" என்ற வாக்குறுதியால் தானே?
"ரகசியம் இருக்கிறது, ஆட்சிக்கு வந்ததும் பாருங்கள்" என்று வாய் சவடால் பேசியதெல்லாம் எங்கே போனது? வெட்கம், மானம், சூடு, சுரணை எல்லாம் எங்கே போனது?
உங்களுடைய தேர்தல் அரசியலுக்கான ஒற்றைப் பொய்யால் மட்டுமே 21 மாணவ மாணவியரின் உயிர் பறிபோய் இருக்கிறது. இன்னும் எத்தனை பிள்ளைகள் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே? உங்களுக்கு இப்போது கூட மனசாட்சி உறுத்தவில்லையா?
"நீட் ஒழிய வேண்டும் என்றால் '2.ஓ' வர வேண்டும்" என்று கூச்சமின்றி திமுக-வினர் 2026ல் வாக்கு கேட்கும் போது, "உரிய மரியாதையுடன்" மக்கள் பதில் அளிப்பார்கள்! இத்தனை மாணவ- மாணவியரின் மரணங்களுக்கு உரிய நீதியை,மக்கள் நிச்சயம் வழங்குவார்கள்!
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.