என் மலர்
ஆன்மிகம்
X
அந்தியூர் குருநாத சாமி கோவில் ஆடிதேர்த்திருவிழா களை கட்டத் தொடங்கியது
Byமாலை மலர்22 July 2016 11:33 AM IST (Updated: 22 July 2016 11:33 AM IST)
அந்தியூர் குருநாத சாமி கோவில் ஆடிதேர்த்திருவிழா களை கட்டத் தொடங்கியதை அடுத்து பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த புதுப்பாளையத்தில் புகழ் பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி தேர்திருவிழாவும் அதையொட்டி குதிரை மாட்டுச்சந்தையும் வெகு சிறப்பாக நடக்கும்.
இந்த ஆண்டுக்கான ஆடி தேர்திருவிழா நேற்று பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
பூச்சாட்டு விழாவையொட்டி பக்தர்களுக்கு குருநாதசாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
விழாவையொட்டி கோவில் புது பொலிவுடன் திகழ்கிறது. ஏராளமான கடைகளும் வைக்கப்பட்டுள்ளது.
பூச்சாட்டையொட்டி தற்போது கோவிலுக்கு பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. திருவிழா நெருங்க...நெருங்க கூட்டம் அதிகரிக்கும் என்பதால் இப்போதே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து குருநாதசாமியை தரிசனம் செய்து கொண்டு செல்கிறார்கள்.
வரும் 27–ந் தேதி கோவிலில் கொடியேற்றப்படுகிறது. வரும் 3–ந் தேதி முதல் வனபூஜை நடக்கிறது. பக்தர்கள் பெரும் ஆவலலுடன் எதிர்பார்க்கும் தேர்திருவிழா வரும் 10–ந் தேதி நடக்கிறது. 60 அடி உயரம் கொண்ட மகமேறு தேர்களில் குருநாதசாமி மற்றும் பெருமாள் சாமி உற்சவ சிலைகள் வைக்கப்பட்டு தேர்வலம் வரும். இந்த தேர்களை பக்தர்கள் தங்கள் தோள்களில் சுமந்து வருவது விசேஷம் ஆகும்.
விழாவையொட்டி 4 நாட்கள் கோவில் முன் குதிரை மற்றும் மாட்டுச்சந்தைகள் நடைபெறும். இந்தியா முழுவதுமிலிருந்து பல வகையான குதிரைகள் மாடுகள் சந்தைக்கு வரும்.
இவற்றை வாங்கவும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் ஆந்தியூரில் குவிய உள்ளார்கள்.

Next Story
×
X