search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுப்பொலிவுடன் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில்.
    X
    புதுப்பொலிவுடன் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில்.

    சேரன் எக்ஸ்பிரசில் சொகுசு பெட்டிகள்: சென்னைக்கு இன்று இரவு முதல் இயக்கம்

    தானியங்கி கதவுகள், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் மற்றும் 22 புதிய சொகுசு பெட்டிகளுடன் சேரன் எக்ஸ்பிரஸ் புதுப்பொலிவுடன் கோவையில் இருந்து சென்னைக்கு இன்று இரவு முதல் இயக்கப்படுகிறது.
    கோவை:

    கோவை-சென்னை இடையே சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தினமும் இரவு 10.40 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலையில் சென்னைக்கு செல்லும்.

    சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் இந்த ரெயில் பயணத்தை பாதுகாப்பானதாகவும், சொகுசாகவும் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இதனையடுத்து இந்த ரெயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் ஜெர்மன் தொழில் நுட்பத்துடன் அதிநவீனம் எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது.

    இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட 10 பெட்டிகள், 3 அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட 5 பெட்டிகள், 2 அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட 1 பெட்டி, முதல் அடுக்கு குளிர்சாதன பெட்டி 1, முன்பதிவில்லாத பெட்டிகள் 3 மற்றும் பேட்டரிகள் கொண்டு செல்லும் பெட்டிகள் 2 என மொத்தம் 22 பெட்டிகள் உள்ளன.


    புதிய ரெயில் பெட்டி வழக்கமான பெட்டிகளை விட 1.7. மீட்டர் நீளம் அதிகமாக இருப்பதால் இருக்கைள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான பெட்டியில் 72 பேர் பயணம் செய்யும் வகையில் இருக்கும். இந்த புதிய பெட்டியில் 80 பேர் பயணம் செய்யலாம். குளிர்சாதன பெட்டியில் 64 பேரில் இருந்து 72 பேராகவும், 2 அடுக்கு குளிர்சாதன பெட்டியில் 48 பேரில் இருந்து 54 பேராகவும் இருக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பயணிகளின் வசதிக்காக பயோ கழிப்பறைகள், இருக்கைகளுக்கு அடியில் கூடுதல் ஸ்பிரிங்குகள், தீ பிடிக்காத பிட்டிங்குகள், ரெயில்களின் உள்ளே சத்தம் கேட்காத வகையில் இன்சுலேசன், பெரிய ஜன்னல்கள், கால்கள் வழுக்காத வகையில் பி.வி.சி. தரை விரிப்புகள், பெட்டிகள் இடையே தானியங்கி கதவுகள், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், விபத்துகளின் போது பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று மோதாமல் தடுக்க சென்டர் பப்பர் கப்ளர் இணைப்பு போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.



    இந்த புதிய ரெயில் பெட்டிகள் முழுக்க முழுக்க ஸ்டெயின்லஸ் கம்பிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் எடை குறைவு. இதனால் ரெயிலை 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும்.

    இந்த புதிய ரெயில் பெட்டிகளுடன் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று இரவு 10.40 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறது.
    Next Story
    ×