என் மலர்
செய்திகள்
X
வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி மரணம்
Byமாலை மலர்12 Sept 2016 8:01 AM IST (Updated: 12 Sept 2016 8:01 AM IST)
வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கோபாலகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
மேட்டூர்:
மேட்டூர் சேலம்கேம்ப் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 61). முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி உள்ளார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
கோபாலகிருஷ்ணன் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய காலத்தில், சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையில் பணியாற்றி வீரப்பனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். கடந்த 1993-ம் ஆண்டு தமிழக-கர்நாடக வனப்பகுதியில் சந்தன கடத்தல் வீரப்பனை தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, வீரப்பன் கும்பல் வைத்த கண்ணிவெடியில் சிக்கி கோபாலகிருஷ்ணன் உள்பட 10-க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயம் அடைந்தனர்.
இதன்காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவரை தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேரில் சந்தித்து ஆறுதல் கூறி இவருக்கு தேவையான வசதிகளை அப்போது செய்து கொடுத்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றி இருந்த கோபாலகிருஷ்ணன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இவர் வீரப்பனை பிடித்தால் தான் திருமணம் செய்வேன் என்று சபதம் செய்திருந்தார். ஆனால் இவர் தேடுதல்வேட்டை குழுவில் இருந்த காலக்கட்டத்தில் வீரப்பனை பிடிக்காததால் தனது வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்யாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
×
X