என் மலர்
செய்திகள்
X
இரண்டு நாள் மழை: செம்பரம்பாக்கம் ஏரியில் 3 அடி நீர்மட்டம் உயர்வு
Byமாலை மலர்1 Nov 2017 1:06 PM IST (Updated: 1 Nov 2017 1:06 PM IST)
செம்பரம்பாக்கம் ஏரியில் மழையால் 2 நாளில் 3 அடி உயர்ந்து இருக்கிறது. தற்போது ஏரியின் நீர்மட்டம் 9 அடியாக உள்ளது.
பூந்தமல்லி:
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில்
இடைவிடாது மழை பெய்தது. இதனால் ஏரி, குளங்களில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது.
கால்வாய்கள் வழியாக மழைநீர் ஏரிகளுக்கு வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம்,
சோழவரம் ஏரிகளுக்கு அதிகளவு மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்இருப்பு நேற்று 452 மில்லியன் கன அடியாக இருந்தது. 1719 கன அடி தண்ணீர் வந்தது. ஆனால்
இன்று 1970 மில்லியன் கனஅடி வந்து கொண்டிருப்பதால் ஏரியில் 617 மில்லியன் கனஅடிக்கு தண்ணீர் உயர்ந்துள்ளது. ஏரியில் 60
கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் மழையால் 2 நாளில் 3 அடி உயர்ந்து இருக்கிறது. தற்போது ஏரியின் நீர்மட்டம் 9 அடியாக (மொத்தம் 24
அடி) உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி பகுதி நேற்று இரவு முதல் இன்று காலை வரை 34 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருவதால் அதை பார்க்க சுற்றுப்புற ஊர்களை சேர்ந்த மக்கள் ஆர்வமாக வருகிறார்கள்.
பூண்டி ஏரியில் நேற்று 300 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. ஏரிக்கு இன்று 240 மில்லியன் கனஅடி மழை தண்ணீர்
வருவதால் ஏரி நீர்மட்டம் 332 மில்லியன் கனஅடியாக உயர்ந்திருக்கிறது.
புழல் ஏரிக்கு 1493 மில்லியன் கனஅடி தண்ணீர் வருவதால் ஏரி நீர்மட்டம் 614 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது.
சோழவரம் ஏரிக்கு 694 மில்லியன் கனஅடி தண்ணீர் வருவதால் ஏரி நீர்மட்டம் 180 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது.

Next Story
×
X