search icon
என் மலர்tooltip icon

    ஆப்கானிஸ்தான்

    • ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • கடந்த வாரம், கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கிராமங்களில் 315 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய ஆப்கானிஸ்தானில் உள்ள கோர் மாகாணப் பகுதிகளில் இதுவரை கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வெள்ளப்பெருக்கால் சாலைப் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்களளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கோர் மாகாணத்தின் நகர்ப்பகுதிகளில் சுமார் 2,000 வீடுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாகவும் 2000க்கும் மேற்பட்ட கடைகள் தண்ணீருக்கு அடியில் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    முன்னதாக விமானப்படை ஹெலிகாப்டர் மூலம், கோர் மாகாண ஆற்றில் விழுந்தவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியின் போது தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக விபத்துக்குள்ளானது, ஒருவர் கொல்லப்பட்டார். கடந்த வாரம், கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கிராமங்களில் 315 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    ஆப்கானிஸ்தானில் வழக்கத்துக்கு மாறாக பெய்து வரும் கனமழைக்கு காலநிலை மாற்றமே காரணம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக ஆப்கனிஸ்தானை ஐநா வரையறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




     


    • கனமழை, நிலநடுக்கம், வறட்சி என மாறிமாறி பேரிடர்கள் ஏற்படுகின்றன.
    • ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    காபூல்:

    காலநிலை மாற்றம் என்பது தற்போது உலகின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதனால் கனமழை, நிலநடுக்கம், வறட்சி என மாறிமாறி பேரிடர்கள் ஏற்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளுள் ஒன்று ஆப்கானிஸ்தான்.

    அந்தவகையில் ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் வீடுகளை இழந்து தவிப்பதாகவும், இதனால் அவர்களது கல்வி பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.

      காபூல்:

      ஆப்கானிஸ்தானில் கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.

      இதனால் காணும் இடமெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக பாக்லான், கோர், ஹெராத் ஆகிய மாகாணங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

      இதன் காரணமாக அங்குள்ள 4 பள்ளிக்கூடங்கள், மசூதி உள்பட ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

      மேலும் சுமார் 2 ஆயிரம் கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே மீட்பு படையினர் அங்கு களத்தில் இறங்கி உள்ளனர்.

      வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களை அவர்கள் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகின்றனர். இதற்காக பல தற்காலிக நிவாரண முகாம்கள் அங்கு அமைக்கப்பட்டு உள்ளன.

      இந்த வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.

      • ஒரேநாளில் கொட்டித்தீர்த்த மழையால் ஆயிரக்காணக்கான வீடுகள் சேதம்.
      • பாக்லானி ஜாதித் மாவட்டத்தில் மட்டும் 150 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

      ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு மாகாணமான பாக்லானில் நேற்று பெய்த கனமழையில் 200 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கனமழை காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக புலம்பெயர்ந்தோர்களுக்கான ஐநா0வின் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

      பாக்லானி ஜாதித் மாவட்டத்தில் மட்டும் 1500 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

      ஆனால் தலிபான் அரசு 62 பேர் உயிரிழந்ததாக நேற்றிரவு தெரிவித்திருந்தது. ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. தகார் மாகாணத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

      வடகிழக்கு மாகாணம் பாதாக்ஷன், மத்திய கோர் மாகானாம், மேற்கு ஹெராத் ஆகியவையும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

      கடும் வறட்சி தொடர்பான அமைப்பைக் கொண்ட ஆப்கானிஸ்தான், கனமழையை எதிர்கொள்ள முடியாமல் திணற வேண்டிய நிலை ஏற்பட்டது. பருவகால மாற்றம் காரணமாக மிகவும் பாதிக்கக்கூடிய நாடாகா ஆப்கானிஸ்தான் மாறி வருகிறது.

      • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 2-ம் தேதி தொடங்குகிறது.
      • ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

      காபூல்:

      20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என் ஐ.சி.சி. அறிவித்திருந்தது.

      நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டது.

      இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னணி வீரர்களான முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

      ஆப்கானிஸ்தான அணி விவரம்:

      ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராகிம் ஜட்ரன், நஜிபுல்லா ஜட்ரன், முகமது இஷாக் (விக்கெட் கீப்பர்), ஹஷ்மத்துல்லா ஓமர்சாய், முகமது நபி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், ரஷீத் கான் (கேப்டன்), நங்யால் கரோட்டி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன் உல் ஹக், பசல்ஹக் பரூக்கி, பரீட் அகமது மாலிக்.

      ரிசர்வ் வீரர்கள்; செடிக் அடல், ஹஜ்ரத்துல்லாஹ் ஜஜாய், சலீம் சபி.

      • விபச்சாரத்திற்கான தண்டனையை விரைவில் அமல்படுத்துவோம்.
      • தலிபான்களின் பணி காபூலை கைப்பற்றியதுடன் முடிவடையவில்லை.

      ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில் அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை பொது இடங்களில் கல்லெறிந்து கொல்லும் தண்டனை மீண்டும் தொடங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

      இதுகுறித்து தலிபான்களின் உச்ச தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாடா பேசும் ஆடியோ, அரசு தொலைக்காட்சியில் ஒலிப்பரப்பட்டது. அதில், விபச்சாரத்திற்கான தண்டனையை விரைவில் அமல்படுத்துவோம். விபசாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு பொது வெளியில் கசையடி மற்றும் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்படும். தலிபான்களின் பணி காபூலை கைப்பற்றியதுடன் முடிவடையவில்லை. அது இப்போதுதான் தொடங்கியுள்ளது என்றார்.

      • இந்த மாதம் தொடக்கத்தில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
      • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

      ஆப்கானிஸ்தானில் இன்று காலை 5.44 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது.

      நிலநடுக்கம் 124 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

      இந்த மாதத்தின் தொடக்கத்திலும் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படுகிறது.

      கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6.3 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹெரத் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஆயிரக்காணக்கானோர் காயம் அடைந்தனர். மேலும் வீடுகளை இழந்தனர்.

      அம்மாகாண மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப சுமார் ஒருமாத காலம் ஆனது. நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டமைப்புகளை சீரமைக்க 400 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

      • ரமலான் தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் பல குண்டு வெடிப்பு.
      • காலை 8 மணியளவில் வங்கி வெளியே காத்திருந்த மக்களை குறிவைத்து குண்டு வெடித்துள்ளது.

      ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் இன்று நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12 பேர் பேர் படுகாயமடைந்துள்ளனர்.

      மார்ச் 11 அன்று இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் பல குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில், சில சம்பவங்களை தலிபான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

      மத்திய காந்தஹார் நகரத்தில் உள்ள நியூ காபூல் வங்கிக் கிளைக்கு வெளியே இன்று காலை 8 மணியளவில் காத்திருந்த மக்கள் குழுவை குறிவைத்து வெடித்துள்ளது.

      இதுகுறித்து கந்தஹார் மாகாணத்தின் தகவல் மற்றும் கலாச்சார இயக்குனர் இனாமுல்லா சமங்கானி கூறுகையில்" தற்கொலைப் படை தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பொதுவாக மக்கள் தங்கள் சம்பளத்தைப் பெறுவதற்காக வங்கியில் கூடுகிறார்கள். அப்போது குண்டு வெடித்துள்ளது. காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்ட நகரின் மருத்துவமனையில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது" என்றார்.

      இதற்கிடையே, தலிபான் அதிகாரிகள் வங்கிக்கு வெளியே உள்ள பகுதியை சுற்றி வளைத்தனர். பத்திரிக்கையாளர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

      இருப்பினும், குண்டுவெடிப்பை அடுத்து ஆம்புலன்ஸ்களில் மயக்கமடைந்தவர்கள் அல்லது இறந்தவர்களின் உடல்கள் ஏற்றப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் அப்பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தனர், அங்கு இரத்தம், உடைகள் மற்றும் காலணிகள் தரையில் சிதறிக்கிடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

      • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.
      • கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட 3வது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

      காபுல்:

      ஆப்கானிஸ்தானில் இன்று மாலை 6.27 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது.

      10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் தெரியவில்லை.

      ஏற்கனவே 4.2 மற்றும் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட 3-வது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

      • நிலப்பரப்பிலிருந்து 15 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணர்வு.
      • சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

      ஆப்கானிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தானிம் மசார் இ சரீஃப் என்ற நகரத்தில் இன்று மாலை 4.50 மணியளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

      இதன் ரிக்டர் அளவ 5.1 ஆக பதிவாகியுள்ளது.

      இது தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ள இந்தியாவின் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம், நிலப்பரப்பிலிருந்து 15 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது.

      இருப்பினும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

      அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்களால் பொது மக்கள் பீதியமடைந்துள்ளனர்.

      • இந்துகுஷ் பகுதியில் இன்று அதிகாலை 4.51 மணிக்கு ரிக்டர் அளவில் 4.3 புள்ளியில் நிலநடுக்கம் உண்டானது
      • ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

      காபூல்:

      ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தானிலும் உணரப்பட்டன. இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் அதிர்ந்தன.

      இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்துகுஷ் பகுதியில் இன்று அதிகாலை 4.51 மணிக்கு ரிக்டர் அளவில் 4.3 புள்ளியில் நிலநடுக்கம் உண்டானது. இது 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

      • ஃபைசாபாத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
      • நிலநடுக்கம் பூமியில் இருந்து 100 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

      ஆப்கானஸ்தானின் ஃபைசாபாத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நிலநடுக்கவியலுக்கான தேசிய ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

      முதல் நிலநடுக்கம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.28.52 மணிக்கு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஃபைசாபாத்தில் இருந்து 126 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 12.55.55 மணிக்கு இரண்டாவது முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 100 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.


       

      "03.01.2024, நள்ளிரவு 12.28.52 மணியளவில் ஃபைசாபாத்தில் இருந்து 126 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. 03.01.2024, நள்ளிரவு 12.55.55 மணியளவில் ஃபைசாபாத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி இருக்கிறது," என ஆப்கானிஸ்தானின் நிலநடுக்கவியலுக்கான தேசிய ஆணையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் தெரிவித்துள்ளது. 

      ×