search icon
என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார்.
    • சங்கீதாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என வலியுறுத்தினர்.

    ஜெயங்கொண்டம்:

    கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொண்டாயிருப்பு காலனி தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவரது மனைவி சங்கீதா(வயது 24). இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான சங்கீதா, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் பிரசவத்திற்காக கடந்த 26-ந் தேதி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சங்கீதா அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ரத்தப்போக்கு இருந்ததால், அவருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து கர்ப்பப்பையையும் அகற்றி உள்ளனர். தொடர்ந்து ரத்தப்போக்கு நிற்காத நிலையில் அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதாவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மருத்துவரின் தவறான சிகிச்சையால் தான் சங்கீதா உயிரிழந்ததாக குற்றம்சாட்டி ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சங்கீதாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என வலியுறுத்தினர்.

    சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சூழலில் டாக்டர்களின் கவனக்குறைவே சங்கீதா சாவுக்கு காரணம் என்று குற்றம்சாட்டி குமார் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சங்கீதாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு நிலவுகிறது.

    • மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளில் படைப்புழுவை கட்டுப்படுத்த முடியவில்லை.
    • 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட நெல் தரமற்ற விதைகளால் குறுகிய காலத்தில் கதிர் வந்து இழப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வேளாண் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் தரமற்ற விதைகளால் 10 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள பயிர்களும் பாதிப்பு அடைந்துள்ளதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் டெல்டா பகுதிகளில் நெல், வாழை, கரும்புக்கு அடுத்து அதிகளவில் பயிரிடும் பயிராக மக்காச்சோளம் முக்கிய பயிராக உள்ளது.

    பெரும்பாலான விவசாயிகள் தனியார் விதை நிறுவனங்களிடம் மக்காச்சோளப் பயிருக்கான விதைகளையும் தனியார் விதை நிறுவனங்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையுமே பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளில் படைப்புழுவை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைகளை வழங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இயற்கை விவசாயிகள் ஒருபுறம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் அதிக மகசூல் கிடைக்கும் என ஆசை காட்டி அதிகளவில் மருந்து செலவு மகசூல் இழப்பு, படைப்புழுத்தாக்குதல், வேரழுகல் உள்ளிட்ட நோய்களும் மேலும் அதிகப்படியான வெப்பம் மழை இவற்றால் மரபணு மாற்றம் செய்து விற்பனை செய்யப்படும் விதைகளால் விவசாயிகள் ஆண்டுதோறும் பாதிப்பதும் உரிய இழப்பீடு கேட்டு போராடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையை போக்க விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 மூட்டைகளே பாரம்பரிய மக்காச்சோளப் பயிரில் விளைச்சல் வந்தாலும் எந்தவித ரசாயன மருந்துகளுமின்றி எரு மட்டும் பயன்படுத்தி மகசூல் இழப்பு வராமல் தடுக்க இயலும் என்கின்றனர் இயற்கை விவசாயிகள்.

    இதற்கு தமிழக வேளாண்மைத்துறை உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மக்காச்சோளப் பயிர்சாகுபடி செய்துள்ள பரப்பில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    மக்காச்சோளப் பயிர் சாகுபடி செய்து உள்ள விவசாய நிலப்பரப்புகள் புள்ளிவிவரத்துடன் சன்னாவூரில் 750 எக்டேர் கோக்குடி, பூண்டி, மலத்தாங்குளம், ஆங்கியனூர், கொரத்தக்குடி, விளாகம், பளிங்காநத்தம், வெங்கனூர், கீழக்காவட்டாங்குறிச்சி, தட்டான்சாவடி, எரக்குடி, வேட்டைக்குடி, அயன்சுத்தமல்லி, கீழப்பழுவூர், வெற்றியூர், சாத்தமங்கலம், கள்ளூர் விரகாலூர் திருப்பெயர் வண்ணம் புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் 4 ஆயிரம் எக்டேர் வீதம் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பயிர்க்காப்பீட்டு மூலம் நிவாரணத்தொகையும் பயிர்க்காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு ரூ30 ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்காச்சோளப் பயிர் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் வங்கி மூலம் கடனாக ரூ23 ஆயிரம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்ததன் அடிப்படையில் மக்காச்சோளப் பயிருக்கு அரசு ஏக்கருக்கு ரூ.2500 வழங்கியது. காப்பீட்டு நிறுவனத்திற்கு 2021, 2022, 2023 காப்பீட்டுத்தொகை 350 செலுத்தியும் இழப்பீடு தொகைக்கான புள்ளிவிவரங்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் கொடுக்காத காரணத்தால் பயிர்க்காப்பீடு இழப்பீடு தொகை வழங்க இயலவில்லை என காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்ததாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.

    இதுகுறித்து அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் கூறுகையில், தங்க சண்முக சுந்தரம் மரபணு மாற்றம் செய்து வழங்கப்படும் மக்காச்சோள விதைகளால் பயிர் சாகுபடியின்போது விவசாயிகள் தொடர்ந்து கடனாளிகாக ஆக்கப்படுகின்றனர்.

    எனவே தற்போதைய நிலையில் தரமற்ற விதைகளை வழங்கி மகசூல் இழப்புக்கு காரணமான நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கவும் உடனடியாக மகசூல் இழப்பு ஏற்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்யவும் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் பாரம்பரிய விதைகளை வழங்கிட துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் என்றார்.

    • தமிழக அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
    • தமிழக அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விக்கிரவாண்டியில் விஜய் பேசியது அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    ஜெயங்கொண்டம்:

    அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 10-க்கும் மேற்பட்ட உயிர்களும், ஏராளமான கால்நடைகளும், விவசாய பயிர்களும் அழிந்துள்ளன.

    இதற்காக தமிழ்நாடு அரசு ரூ. 2 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அண்டை மாநிலமான புதுச்சேரியில் ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்குவதாக அறிவித்து உள்ளனர்.

    ஆகவே தமிழ்நாடு அரசும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கூறினார். இந்த வெள்ள நிவாரணப் பணிகளில் ராணுவம் போல போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க என்னை ஒரு மாதத்திற்கு முன்பாகவே அழைத்திருந்தார்கள்.

    இருந்தபோதிலும் நான் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான விளக்கத்தை தெரிவித்துள்ளேன். புத்தக வெளியீட்டாளர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

    விக்கிரவாண்டியில் விஜய் பேசியது தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு அரசியல் சாயம் பூசியதால் சிக்கல் எழுந்தது.

    நானும் அந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றால் அரசியல் சாயம் பூசப்படும். விஜய் மட்டும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கட்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தோம். விஜய்க்கும் எங்களுக்கும் எந்த சிக்கலும் இல்லை, முரண்பாடும் இல்லை.

    ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து தி.மு.க. அரசுக்கு எதிராக பேசி வருவது அவரது தனிப்பட்ட கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரியலூர் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டையாகும்.
    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் இல்ல திருமண விழா இன்று அரியலூரில் நடந்தது.

    இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:-

    அரியலூர் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டையாகும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கூட அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை அ.தி.மு.க. பெற்றது.

    அதற்குக் காரணமான அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரனை மனதார பாராட்டுகிறேன். அவரது இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அரியலூர் மக்களுக்கு சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. கடந்த ஆட்சியில் மழையின் காரணமாக மக்காச்சோள பயிர்கள் பாதிக்கப்பட்டது. அப்போது விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    உடனடியாக அ.தி.மு.க. அரசு ரூ.156 கோடி விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கியது. அடுத்த ஆண்டு மக்காச்சோள பயிர்கள் பாதிக்கப்பட்ட போது தமிழகம் முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்து ரூ. 45 கோடியில் வாங்கப்பட்டு எங்கெல்லாம் பயிர்கள் பாதிக்கப்பட்டதோ அங்கெல்லாம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

    எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டது. அதில் அரியலூருக்கும் ஒரு கல்லூரி வழங்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கல்வித்துறையில் புரட்சி நடந்தது.

    வேளாண்மை கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள் கால்நடை ஆராய்ச்சி மையம் போன்றவைகள் அமைக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் தொகுதியில் ஒரு அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது.

    மேலும் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பல்வேறு எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்தது.

    ஆனால் தற்போது பொய்யான வாக்குறுதிகள் அளித்து ஆட்சிக்கு வந்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தமிழகத்தில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என பொய்யான பிரசாரம் செய்து வருகிறார். இது மிகவும் கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் நல்லாட்சி அமைய நீங்கள் எலலாம் நல்ல ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரிய வகை ரத்தம் தேவை என்ற தகவல் ரத்த தானம் செய்யும் குழுக்களில் பகிரப்பட்டது.
    • உலகில் 4 மில்லியன் பேரில் ஒருவருக்கு மட்டுமே இந்த அரிய வகை ரத்தம் உள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர்.

    அறுவை சிகிச்சைக்கு ரத்தம் தேவை என்பதால் கர்ப்பிணியை பரிசோதித்ததில் அவரது ரத்த வகை அரிய வகையான 'பம்பாய் ரத்த வகை' என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து கர்ப்பிணி அறுவை சிகிச்சைக்கு அரிய வகை ரத்தம் தேவை என்ற தகவல் ரத்த தானம் செய்யும் குழுக்களில் பகிரப்பட்டது.

    இதை பார்த்த ஜெயங்கொண்டத்தை அடுத்த ஆண்டிமடத்தை சேர்ந்த ரத்தக்கொடையாளர் ரஞ்சித்ராஜா தான் நடத்தி வரும் ரத்ததான குழு மூலம் இந்த அரிய ரத்த வகையான ஓ.எச். பிளஸ் வி.இ. ரத்த தானம் வழங்கும் கொடையாளர்கள் தேடுதல் நடந்தது. அப்போது விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒ.எச். பிளஸ். வி.இ. ரத்தத்தை ஒருவர் தானம் செய்தது தெரிய வந்தது. அதை அரியலுார் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து விழுப்புரம் டாக்டர் அசோக்குமார், ரத்ததான கொடையாளர் சந்துரு உதவியுடன் அவசர மருத்துவ சேவைக்காக விமானம், ரெயில், ஆம்புலன்ஸ் விரைந்து செல்ல ஏற்பாடு செய்யும் "பிப்டோ தமிழ் நாடு" அமைப்பினை நாடினர். அந்த அமைப்பின் வழிகாட்டுதலின்படி அரிய வகை ரத்தம் விழுப்புரம் ரெயில் நிலையத்திலிருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் விரைவாக கொண்டுவரப்பட்டது. உரிய நேரத்தில் ரத்தத்தை கொண்டு வந்து கர்ப்பிணிக்கு செலுத்த ஏதுவாக அரியவகை ரத்ததுடன் எதிர் திசையில் வரும் ரெயில்களுக்காக நிறுத்தாமல் வழக்கமான பயண நேரத்தை விட 30 நிமிடம் முன்னதாக பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் விரைந்து வந்து அரியலுார் ரெயில் நிலையத்தை அடைந்தது.

    அங்கிருந்து மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லபட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகு தாயும், பெண் குழந்தையும் நலமுடன் இருப்பதாக அரசு டாக்டர்கள் கூறியதையடுத்து ரத்ததான குழுவினர் மகிழ்ந்தனர். அரியலுார் அரசு மருத்துவமனையில் நடந்த மனித நேய மிக்க இந்த செயலை அனைவரும் பாராட்டினர்.

    ரத்தம் வழங்கியவர்கள், விரைவாக கொண்டு செல்ல உதவியவர்கள், தன்னார்வலர்கள், அரசு டாக்டர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்னம் உள்ளது.

    கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட இந்த அரிய வகை ரத்தமான 'ஓஎச் பிளஸ் விஇ' வகை டாக்டர் ஒய்.எம். பெண்டே என்பவரால் 1952-ல் மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இந்த புதிய ரத்த வகை 'பம்பாய் ரத்த வகை' என்றும் 'பம்பாய் ஓஎச் பிளஸ் விஇ' என்றும் மருத்துவத்துறையில் அழைக்கப்படுகிறது.

    உலகில் 4 மில்லியன் பேரில் ஒருவருக்கு மட்டுமே இந்த அரிய வகை ரத்தம் உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள சிலரிடம் தான் இந்த அரிய ரத்த வகை காணப்படுகிறது. இந்தியாவில் மொத்தமே 7 ஆயிரத்து 500 பேருக்கும் குறைவாகவே இந்த ரத்த வகை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தை சேர்ந்த அழகேசன் ரெயில்வே துணை மந்திரியாக இருந்தார்.
    • விபத்தில் இருந்து தப்பியவர்களில் ஒரு சிலர் இன்னும் உயிரோடு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மக்களுக்கு இது ஒரு கசப்பான நாள். அரியலூர் மக்கள் மட்டுமல்ல சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பயணம் செய்த ரெயில் பயணிகளுக்கு அன்று துயரமான நாள். 1956-ம் ஆண்டு இந்த நாளில் நடந்த கோர விபத்து இந்தியாவையே உலுக்கியது.

    விபத்துக்கு முந்தைய நாள் இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 603) சுமார் 800 பயணிகளுடன் புறப்பட்டது. நீராவி என்ஜின் இணைக்கப்பட்ட அந்த ரெயில் கொட்டும் மழையில் கரும்புகையை கக்கிக் கொண்டு கிளம்பியது.

    அந்த ரெயிலுக்கு முன்பாக, திருவனந்தபுரம், நெல்லைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்றிருந்தன. ஆனால், தூத்துக்குடி ரெயிலில் சென்ற பலருக்கு இதுதான் இறுதி யாத்திரை என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை. மொத்தம் 13 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் சென்ற பாதை எல்லாம் இடைவிடாமல் இடி-மின்னலுடன் மழை பெய்து கொண்டே இருந்தது.

    முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்த பயணிகள் அயர்ந்து தூங்கினார்கள். பொதுப்பெட்டிகள், பெண்கள் பெட்டியில் பயணித்தவர்கள் தூக்கம் இன்றி கண்விழித்த நிலையில் இருந்தனர். நள்ளிரவு நேரத்தில் ரெயில் விருத்தாசலம் ரெயில் நிலையத்தை அடைந்ததும், ரெயிலின் கடைசி பெட்டி கழற்றப்பட்டது.

    அது சேலம் செல்லும் இணைப்பு ரெயிலில் மாற்றப்படுவதற்காக தனியாக நிறுத்தப்பட்டது. பின்பு, 12 பெட்டிகளுடன் தூத்துக்குடி ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. ரெயிலை விட்டு பயணிகள் ஏறி இறங்கினாலும், மழை மட்டும் விடாமல் துரத்திக் கொண்டே இருந்தது.

    அதிகாலை வேளையில், 5.30 மணிக்கு சூரியன் கண் விழிப்பதற்கு முன்பாக ரெயில் அரியலூரை தாண்டி திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. காவிரியின் கிளை ஆறான மருதையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த ரெயில்வே பாலத்தை மூழ்கடித்த நிலையில் அப்போது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.

    இந்த அபாயகரமான பாலத்தைத்தான் ரெயில் கடந்து செல்ல வேண்டும். ஆனால், போதிய வெளிச்சம் இல்லாததால், ரெயிலை இயக்கிய என்ஜின் டிரைவர் துரைசாமி, பயர்மேன்கள் (நிலக்கரியை எரியவைப்பவர்கள்) முனுசாமி, கோதண்டன் ஆகியோரின் கண்களுக்கு வெள்ளத்தின் அபாய நிலை தெரியவில்லை.

    வேகமான நீரோட்டத்தால், பாலத்தின் தூண்களும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. ரெயில் என்ஜின் பாலத்தை கடக்க முற்பட்டபோது, தண்டவாளம் ஆட்டம் கண்டது. ரெயில் பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக முன்னேறிச் சென்ற நிலையில், பாரம் தாங்காமல் பாலம் அப்படியே வெள்ளத்தில் மூழ்கியது.

    இதனால், நிலைகுலைந்த ரெயில் பெட்டிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. என்ன நடக்கிறது என்று தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அபயக் குரல் எழுப்பியும், காப்பாற்றுவதற்கு அங்கு யாரும் இல்லை. ரெயிலில் உள்ள முதல் 7 பெட்டிகளை வெள்ளம் மூழ்கடித்துவிட்டது. அதிலும், என்ஜினுக்கு அடுத்த பெட்டி பெண்கள் பெட்டியாக இருந்ததால், அதில் பயணித்த பெண்கள், குழந்தைகள்தான் நீருக்கு அடியில் சிக்கிக்கொண்டு மாண்டுபோனார்கள். இந்த கோர சம்பவத்தில் சுமார் 250 பேர் தண்ணீருக்குள் ஜீவ சமாதி அடைந்தார்கள். விடிந்தும் விடியாததுமாக சம்பவத்தை கேள்விப்பட்டு, அங்கு மீட்புக் குழுவினர் வந்தனர்.

    ஆனால், 2 நாள் போராட்டத்திற்கு பிறகும் 150 சடலங்களை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. பலரது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து அழுகிய நிலையிலேயே மீட்கப்பட்டன. ஒருசில பெட்டிகள் மண்ணுக்குள் மண்ணாக புதைந்ததால் தண்ணீர் வடிந்த பிறகு அதே இடத்தில் தீ வைத்து கொளுத்தப்பட்டது.



    வெள்ளத்தில் சிக்கியவர்கள் அம்மா, அப்பா என அலறினார்கள், கையெடுத்து கும்பிட்டார்கள் காப்பாற்றுங்கள் என கெஞ்சினார்கள்.

    சுற்றுவட்டாரத்தின் கிராமத்திலிருந்து வந்த சிலர் காப்பாற்றுவது போல் நடித்து கையில் வைத்திருந்த பெட்டியை பிடுங்கி கொண்டு கையிலும் கழுத்திலும் போட்டிருந்த தங்க நகைகளை பறித்துக்கொண்டு ஆற்று வெள்ளத்தில் அப்படியே தள்ளிய வேதனையும் நடந்தேறியது.

    இந்த கோர சம்பவம் ரெயில் விபத்தை விட சோக சம்பவமாக இன்றும் பேசப்பட்டு வருகின்றது. இந்தியாவையே உலுக்கிய இந்த கோர விபத்து சம்பவத்தின்போது, பிரதமராக நேரு இருந்தார்.

    ரெயில்வே துறை மந்திரியாக லால்பகதூர் சாஸ்திரி இருந்தார். ரெயில் விபத்துக்கு முழுப்பொறுப்பேற்று லால்பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    தமிழகத்தை சேர்ந்த அழகேசன் ரெயில்வே துணை மந்திரியாக இருந்தார்.

    இந்த விபத்து நடந்து 68 ஆண்டுகள் ஆகிவிட்டன. விபத்தில் இருந்து தப்பியவர்களில் ஒரு சிலர் இன்னும் உயிரோடு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    என்றாலும், வரலாற்றில் கருப்பு எழுத்துகளால் பதிவான இந்த கோர நிகழ்வு 68 ஆண்டுகள் கடந்தாலும், நெஞ்சை கசக்கிப் பிழியத்தான் செய்கிறது.

    • அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

    அரியலூர்:

    அரியலூரில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜீவ் காந்தி (வயது 41). இவர் தனது பள்ளியில் படிக்கும் மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    ஆசிரியர் தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்வது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து ஆசிரியர் ராஜீவ் காந்தியை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

    • தமிழக மக்கள் திமுக மீது வைத்துள்ள அன்பு எடப்பாடி பழனிசாமிக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது.
    • எப்போது முடியும் என தமிழர்கள் காத்திருந்த ஆட்சிதான் இபிஎஸ் ஆட்சி.

    அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.88 கோடி மதிப்பில் 507 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஒரு சிலரை போல டிவியில் பார்த்து பிரச்சனைகளை தெரிந்து கொள்பவன் அல்ல நான்.

    * தமிழக மக்கள் திமுக மீது வைத்துள்ள அன்பு எடப்பாடி பழனிசாமிக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது.

    * அதிமுக ஆட்சியில் பல திட்டங்களை கொண்டு வந்தது போல் சிரிக்காமல் பேட்டி அளித்துள்ளார்.

    * இபிஎஸ் நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் வந்த முதலீடுகள் எவ்வளவு?

    * எப்போது முடியும் என தமிழர்கள் காத்திருந்த ஆட்சிதான் இபிஎஸ் ஆட்சி.

    * திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிவிட்டு ஓய்வு எடுக்க செல்பவன் நான் இல்லை.

    * பிரச்சனைகளை நேர்கொண்டு அதனை தீர்ப்பவன் நான், மக்களுக்காக பார்த்து பார்த்து திட்டம் தீட்டுபவன் நான்.

    * தேடி வந்து மனுக்கள் தரும் மக்களின் நம்பிக்கையை என்றும் காப்பாற்றுவேன் என உறுதி தருகிறேன்.

    * குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    * மிக மிக நலிந்த மக்களுக்கான ஆட்சியாக திமுக ஆட்சி இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

    * உங்கள் குடும்பத்தின் ஒருவனாக இருந்து நலத்திட்டங்களை நிறைவேற்றுகிறேன் என்று கூறினார்.

    • தீபாவளிக்கு தடையின்றி சிறப்பு பேருந்துகளை இயக்கி சிறப்பாக செயல்பட்டவர் சிவசங்கர்.
    • பெரம்பலூர் மாவட்டம் மருதையாற்றின் குறுக்கே ரூ.24 கோடியில் பாலம் அமைக்கப்படும்.

    அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.88 கோடி மதிப்பில் 507 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * முதல்வராக பொறுப்பேற்ற பின் மகளிருக்கான கட்டணமில்லா திட்டத்திற்கு தான் முதல் கையெழுத்திட்டேன்.

    * அரியலூர் ஆற்றல் மிகு மாவட்டமாகவும், பெரம்பலூர் பெருமை மிகு மாவட்டமாகவும் மாற வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

    * பெரம்பலூரில் 456 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்துள்ளேன். 27 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உள்ளேன்.

    * அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியவர், பெரம்பலூர் மாவட்டத்தை சிறப்பு பொருளாதார மண்டலமாக மாற்றியவர் கலைஞர்.

    * தீபாவளிக்கு தடையின்றி சிறப்பு பேருந்துகளை இயக்கி சிறப்பாக செயல்பட்டவர் சிவசங்கர்.

    * அரசு விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த சிவசங்கரை அரியலூர் அரிமா சிவசங்கர் என அவர் புகழ்ந்தார்.

    * ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையை 29 கோடியில் தரம் உயர்த்தும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.

    * அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் ரூ.3.20 கோடியில் மேம்படுத்தப்படும்.

    * அரியலூர் கலெக்டர் வளாகத்தில தீயணைப்பு மற்றும் மீட்பு படை நிலையத்திற்கு ரூ.4.30 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும்.

    * வாடகை கட்டிடத்தில் உள்ள 35 துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ.15 கோடியில் சொந்த கட்டிடம் கட்டப்படும்.

    * பெரம்பலூர் மாவட்டம் மருதையாற்றின் குறுக்கே ரூ.24 கோடியில் பாலம் அமைக்கப்படும்.

    * அரசு மாதிரி பள்ளிகளுக்கு ரூ.56 கோடியில் புதிய வகுப்பறை விடுதி கட்டடம் கட்டப்படும்.

    * திருமாவின் கோரிக்கையான அரியலூர் வழக்கறிஞர் சங்கத்திற்கு ரூ.101.5 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என்று கூறினார்.

    • மகளிரால் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்களை சுவைத்து அது குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.
    • மேடையில் பேசிய தாய்மார்களின் குழந்தைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மடியில் அமர வைத்து கொஞ்சி மகிழ்ந்தார்.

    அரியலூர்:

    பள்ளிக்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களை வழங்கும் பொருட்டு, ரூ.22 கோடியில் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டத்தின் 2வது தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரம் வாரணாசியில் தொடங்கி வைத்தார்.

    அப்போது அங்கிருந்த உணவு பொருட்கள் கண்காட்சியினை அவர் பார்வையிட்டார். அப்போது மகளிரால் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்களை அவர் சுவைத்து அது குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் அங்கிருந்த அங்கன்வாடிக்கு சென்று குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார். பின்னர் அவர் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பினை அவர் வழங்கினார்.

    பின்னர் அவர் அங்கு மரக்கன்றை நட்டார். பின்னர் அவர் விழா மேடைக்கு சென்றபோது, பூக்களுடன் நின்றிருந்த குழந்தைகளை பார்த்து அருகில் சென்றார். அப்போது குழந்தைகள் அவருக்கு பூக்களை பரிசளித்தனர். அதனை மகிழ்வுடன் பெற்றுகொண்ட அவர் விழா மேடைக்கு சென்றார்.

    மேடையில் வாரணாசியை சேர்ந்த ராகவி, பரமேஸ்வரி சக்கரபாணி, மல்லூர் ராஜேஸ்வரி கார்த்திக், மரவனூர் ஜெயபிரியா பாண்டியன், ஆயிஷா பானு உள்ளிட்ட குழந்தைகள் பெற்ற தாய்மார்களுக்கு அவர் ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கி இத்திட்டத்தின் 2-வது தொகுப்பினை தொடங்கி வைத்தார்.

    அதன் பின்னர் இத்திட்டத்தின் முதலாம் கட்ட பயனாளிகள், இத்திட்டத்தின் பயன் குறித்து பேசினர். சுகந்தி என்ற பெண் பேசும்போது, என் குழந்தை குறை மாசத்தில் பிறந்ததால் எடை குறைவாக இருந்தது. பல இடங்களில் சென்று பார்த்தபோது எந்த பயனும் இல்லை. இந்நிலையில் முதலமைச்சரின் ஊட்டச்சத்து பெட்டகம் கொடுக்கப்பட்டது. இதன் பயனாக எனது குழந்தைக்கு நல்ல வளர்ச்சி தெரிந்தது. தற்போது எனது குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என்று அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து முதலாம் கட்ட பயனாளி ரம்யா பேசும்போது, எனது குழந்தையின் எடைக்கு ஏற்ற உயரமில்லை. உங்கள் திட்டம் குறித்து கேள்விபட்டு அங்கன்வாடி மையத்திற்கு சென்று ஊட்டச்சத்து பெட்டகத்தை பெற்று அதனை சாப்பிட்டு, எனது குழந்தைக்கு தாய்பால் புகட்டினேன். இதனால் எனது குழந்தை மிகுந்த ஆரோக்கியமாக உள்ளது என்று அவர் கூறினார்.

    மகாலட்சுமி என்பவர் பேசும்போது, போன வருடம் கொடுத்த தொகுப்பினை நானும் சாப்பிட்டேன், குழந்தைக்கும் கொடுத்தேன். தற்போது நானும் குழந்தையும் நலமாக உள்ளோம். அதனால் தான் உங்களை பார்த்து நன்றி சொல்ல வந்தேன் என்று அவர் பேசினார்.

    மேடையில் பேசிய தாய்மார்களின் குழந்தைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மடியில் அமர வைத்து கொஞ்சி மகிழ்ந்தார்.

    விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கீதா ஜீவன், சிவசங்கர், எம்.பி.க்கள் திருமாவளவன், ஆர்.ராசா, அருண் நேரு, சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், கலெக்டர் ரத்தினசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சுமார் 130 ஏக்கரில் ரூ.1,000 கோடி முதலீட்டில் புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலை அமைகிறது.
    • புதிய காலணி தொழிற்சாலை மூலம் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி அவர் மரியாதை செலுத்தினார்.

    இதைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் உள்ள புதிய சிப்காட் தொழிற்பேட்டைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    ஜெயங்கொண்டத்தில் சுமார் 130 ஏக்கரில் ரூ.1,000 கோடி முதலீட்டில் புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலை அமைகிறது. இந்த புதிய காலணி தொழிற்சாலை மூலம் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    • பொதுமக்களிடம் கைகளை குலுக்கி, மனுக்களை பெற்றுக்கொண்டு முதலமைச்சர் உற்சாக நடை போட்டார்.
    • குழந்தையை கையில் ஏந்தி நின்ற ஒரு தாய்மாரின் அருகில் சென்று குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர், பெரம்பலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஜெயங்கொண்டம் சென்றார். அங்கு அவருக்கு தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் காரில் இருந்து இறங்கிய முதலமைச்சர் நடந்தே சென்று பொதுமக்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார். அப்போது மழை லேசாக தூறியது. இதனை பொருட்படுத்தாமல் பொதுமக்களிடம் கைகளை குலுக்கி, மனுக்களை பெற்றுக்கொண்டு முதலமைச்சர் உற்சாக நடை போட்டார்.

    அப்போது அங்கு நின்றிருந்த தாய்மார்களிடம் சிறிது நேரம் உரையாடினார். மேலும் குழந்தையை கையில் ஏந்தி நின்ற ஒரு தாய்மாரின் அருகில் சென்று குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தார்.

    இதனை தொடர்ந்து ஜெயங்கொண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவ சிலையை அவர் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சிவசங்கர், ஆர்.ராசா எம்.பி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    ×