மிதுனம் - வார பலன்கள்

வார ராசிபலன் 19.1.2025 முதல் 25.1.2025 வரை

Published On 2025-01-19 08:29 IST   |   Update On 2025-01-19 08:30:00 IST

19.1.2025 முதல் 25.1.2025 வரை

அறிவும் திறமையும் பளிச்சிடும் வாரம். ராசியில் வக்ர செவ்வாய் ராசி அதிபதி புதனின் பார்வையில் சஞ்சாரம் செய்கிறார்.சாதிக்கும் எண்ணம் மேலோங்கும். தீராத, தீர்க்க முடியாத பல பிரச்சினைகள் தீரக் கூடிய நேரமாகும். கடந்த கால நெருக்கடிகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். தீட்டிய திட்டங்களில் வெற்றி பெற நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உதவுவார்கள். அடமானப் பொருட்களை மீட்க தேவையான பணம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணியில் நிலவிய மன அழுத்தம் குறையும். நவீனகரமான பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும்.

பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் பாராட்டும் அன்பும் கிடைக்கும். உயர் கல்வியால் மேன்மை உண்டாகும். கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க ஏற்ற காலம். குல தெய்வ அருள் கிடைக்கும். திருமண முயற்சியில் நல்ல வரன் அமையும். தம்பதிகளிடம் நிலவிய மனக்கசப்புகள் சீராகும். திரைக் கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.அலைச்சல் மிகுதியாக இருந்தாலும் நிம்மதியான தூக்கம் இருக்கும். நடராஜர் வழிபாட்டால் அருளும், பொருளும் பெருகும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News