மிதுனம் - வார பலன்கள்

வார ராசிபலன் 2.2.2025 முதல் 8.2.2025 வரை

Published On 2025-02-02 14:46 IST   |   Update On 2025-02-02 14:47:00 IST

2.2.2025 முதல் 8.2.2025 வரை

உள்ளம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் வாரம். ராசியில் வக்ர செவ்வாய்.சொத்துப் பிரச்சினை சுமூகமாகும்.குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மனக் கசப்பால் பிரிந்த சொந்தங்கள் மீண்டும் இணைவார்கள். தந்தையின் கடனாலும், வைத்தியச் செலவாலும் கலங்கியவர்களுக்கு கடன் தீர்க்கும் மார்க்கம் தென்படும். உடன் பிறந்தவர்களின் நலனுக்காக சிறிய பொருள் விரயத்தை சந்திக்க நேரும். பதவி உயர்வு, கவுரவப் பதவிகள் தேடி வரும். திருப்தியான நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் கைகூடும்.

குல தெய்வ அருளால் பூர்வீகம் சம்பந்தமான விசயங்கள், வழக்குகள் முடிவிற்கு வரும். புதிய கூட்டுத் தொழில் முயற்சிகள் சாதகமாகும். பிள்ளைகள் போட்டித் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.உயர்கல்வி முயற்சி சித்திக்கும்.கணவன் மனைவி உறவில் பாசமும், நேசமும் அதிகரிக்கும். ஆன்மீக தலங்களுக்குச் சென்று மன நிம்மதியை அதிகரிப்பீர்கள். குடும்பத்தில் திருமணம், வளைகாப்பு, கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்விற்கான அறிகுறிகள் தென்படும். மகா கணபதியை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News