மிதுனம் - வார பலன்கள்

வார ராசிபலன்

Published On 2023-09-25 09:17 IST   |   Update On 2023-09-25 09:18:00 IST

25.9.2023 முதல் 1.10.2023 வரை

இலக்கை நிர்ணயம் செய்யும் வாரம். ராசி அதிபதி புதன் முயற்சி ஸ்தான அதிபதி சூரியனுடன் பரிவர்த்தனை பெறுவதால் திட்டமிட்டு செயல்படு வீர்கள். மாற்றங்கள் உண்டாகும். லட்சியம் எண்ணங்கள் ஈடேறும்.விரும்பிய உதவிகள் தேடி வரும். பொருளாதாரம் சீராக இருக்கும். வரவிற்கு ஏற்ற செலவும் உண்டு. தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணையும் காலம் இது. குழந்தைகள் உயர் கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்ல நேரும். ராசி அதிபதி புதனை சனி பார்ப்பதால் உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். பெண்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு தங்க நகைகளை இரவல் கொடுக்க கூடாது. சுபச் செய்திகளால் சுபவிரயங்கள் ஏற்படும். புத்திர பிராப்தம் உண்டாகும். பார்த்துச் சென்றவரனிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும். மாமனார், மைத்துனரால் ஏற்பட்ட மனச் சங்கடம் மறையும்.மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். 26.9.2023 அன்று இரவு 8.28 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் சோர்வால் எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். மகாளய பட்ச காலத்தில் பித்ருக்களின் நல்லாசி பெற முயற்சிக்கவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News