ஆட்டோ டிப்ஸ்

412 கிமீ ரேஞ்ச் வழங்கும் ஹோண்டா எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

Published On 2023-05-16 15:04 GMT   |   Update On 2023-05-16 15:04 GMT
  • ஹோண்டா e:Ny1 மாடலில் 68.8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
  • இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹோண்டா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் வாகனம் e:Ny1 பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹோண்டா e ஹேச்பேக் மாடலை தொடர்ந்து ஐரோப்பிய சந்தையில் ஹோண்டா அறிமுகம் செய்திருக்கும் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் ஆகும்.

டிசைனை பொருத்தவரை e:Ny1 மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் ஹோண்டா HR-V மற்றும் e:NS1 போன்றே காட்சியளிக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. HR-V மாடலை பொருத்தவரை அப்ரைட் டிசைன், ஹோண்டாவின் புதிய தலைமுறை மாடல்களை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது.

இந்த காரில் வழக்கமாக வழங்கப்படும் கிரில் மாற்றப்பட்டு புதிதாக என்க்லோஸ் செய்யப்பட்ட பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பம்ப்பரின் கீழ்புறம் ஏர் வெண்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது எலெக்ட்ரிக் பவர்டிரெயினுக்கு தேவையான காற்றோட்டத்தை உறுதி செய்கிறது.

ஹோண்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய e:N ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கும் e:Ny1 மாடலில் 68.8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 412 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 201 ஹெச்பி பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

Tags:    

Similar News