ஆட்டோ டிப்ஸ்

உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டிய டாடா ஹேரியர்

Published On 2023-05-18 15:18 GMT   |   Update On 2023-05-18 15:18 GMT
  • சமீபத்தில் டாடா ஹேரியர் மாடல் பிஎஸ் 6 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டது.
  • மைல்கல் பற்றிய தகவல் டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் புது மைல்கல் எட்டியுள்ளது. உற்பத்தி ஆலையில் இருந்து ஹேரியர் மாடலின் ஒரு லட்சமாவது யூனிட் வெளியிடப்பட்டு இருக்கிறது. 2019 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, ஹேரியர் மாடல் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.

இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு பின் டாடா ஹேரியர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. தற்போது 19 வெவ்வேறு வேரியண்ட்கள், ஆறு வித நிறங்களில் கிடைக்கும் எஸ்யுவி-யாக ஹேரியர் மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம் என்று துவங்குகிறது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 24 லட்சத்து 06 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

புதிய விற்பனை மைல்கல் பற்றிய தகவலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் தனது ஹேரியர் மாடலை பிஎஸ் 6 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து இருந்தது. இதில் பானரோமிக் சன்ரூஃப், 6 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர் வழங்கப்பட்டு உள்ளது.

இதன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அப்கிரேடு செய்யப்பட்டு, பெரியதாக 10.25 இன்ச் அளவில் டிஸ்ப்ளே, புதிய ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, iRA கனெக்டெட் வெஹிகில் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 200-க்கும் அதிக வாய்ஸ் கமாண்ட்களை, ஆறு வித்தியாசமான மொழிகளில் இயக்கும் வசதி கொண்டிருக்கிறது. 

Tags:    

Similar News