பைக்
2025 ஜனவரி மாத பைக்குகள் விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முதலிடம் பிடித்து அசத்தல்
- 2025 ஜனவரி மாதத்தில் 4.42 லட்சம் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
- ராயல் என்பீல்டு நிறுவனம் 91,132 பைக்குகளை இந்தாண்டு ஜனவரி மாதம் விற்பனை செய்துள்ளது.
2025 ஜனவரி மாதத்தில் 4.42 லட்சம் பைக்குகளை விற்பனை செய்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இது கடந்தாண்டை விட 141% அதிகமாகும்.
இந்த பட்டியலில் 3.97 லட்சம் பைக்குகளை விற்பனை செய்து டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இது கடந்தாண்டை விட 17% அதிகமாகும்.
1.08 லட்சம் பைக்குகளை விற்பனை செய்து சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இது கடந்தாண்டை விட 14% அதிகமாகும்.
கடந்தாண்டை விட 20% வளர்ச்சியுடன் ராயல் என்பீல்டு நிறுவனம் 91,132 பைக்குகளை இந்தாண்டு விற்பனை செய்துள்ளது.