பைக்

ரூ.74,999 ஆரம்ப விலையில் ரோட்ஸ்டர் எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்த ஓலா நிறுவனம்

Published On 2025-02-05 21:48 IST   |   Update On 2025-02-05 21:48:00 IST
  • ரோட்ஸ்டர் X எலக்ட்ரிக் பைக்கில் 9bhp பவரை வழங்கும் 7kW மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
  • ரோட்ஸ்டர் X+ எலக்ட்ரிக் பைக்கில் 14bhp பவரை வழங்கும் 11kW மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

ஓலா நிறுவனம் ரோட்ஸ்டர் எக்ஸ் மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

ரோட்ஸ்டர் எக்ஸ் . ரோட்ஸ்டர் எக்ஸ்+ என 2 மாடல்களில் 5 வகைகளாக இந்த பைக்குகள் வெளியாகிறது.

ரோட்ஸ்டர் X எலக்ட்ரிக் பைக்கில் 9bhp பவரை வழங்கும் 7kW மின்சார மோட்டார் உள்ளது. 2.5kWh மற்றும் 3.5kWh ரோட்ஸ்டர் X எலக்ட்ரிக் பைக்கில் அதிகபட்சமாக 105 கிமீ வேகத்திலும் 4.5kWh ரோட்ஸ்டர் X எலக்ட்ரிக் பைக்கில் அதிகபட்சமாக 118 கிமீ வேகத்திலும் பயணம் செய்யலாம்.

4.5kWh மற்றும் 9.1kWh பேட்டரி கொண்ட ரோட்ஸ்டர் X+ எலக்ட்ரிக் பைக்கில் 14bhp பவரை வழங்கும் 11kW மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்குகளில் 2.8 வினாடிகளில் 40 கிமீ வேகத்தை எட்டிவிடலாம். இந்த இரண்டு மாடல்களும் 1kW சார்ஜருடனும் விருப்பப்பட்டால் 2.2kW சார்ஜருடனும் கிடைக்கும்.

ஏப்ரல் 2025 இல் வெளிவரும் 9.1kWh எலக்ட்ரிக் பைக்கை தவிர மற்ற பைக்குகள் மார்ச் மாதத்தில் டெலிவரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்குகளின் எக்ஸ் ஷோ ரூம் விலை:

ரோட்ஸ்டர் எக்ஸ் (2.5kWh) - ரூ.74,999

ரோட்ஸ்டர் எக்ஸ் (3.5kWh) - ரூ.84,999

ரோட்ஸ்டர் எக்ஸ் (4.5kWh) - ரூ.94,999

ரோட்ஸ்டர் எக்ஸ்+ (4.5kWh) - ரூ.1,04,999

ரோட்ஸ்டர் எக்ஸ்+ (9.1kWh) - ரூ.1,54,999

Tags:    

Similar News