பைக்

195 கி.மீ. ரேன்ஜ்.. வேற லெவல் மாற்றங்களுடன் புது ஒலா ஸ்கூட்டர் அறிமுகம்!

Published On 2023-08-17 15:27 IST   |   Update On 2023-08-17 15:27:00 IST
  • ஒலா S1 ப்ரோ ஜென் 2 மாடலில் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
  • புதிய ஒலா ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 120 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் S1 ப்ரோ ஜென் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்டு இருக்கும் வகையில், உருவாக்கப்பட்டு உள்ளது. எனினும், இதன் ஒட்டுமொத்த டிசைன் முந்தைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது.

புதிய மாடலிலும், அதன் முந்தைய வெர்ஷனை போன்று வளைந்த மற்றும் பெரிய சைடு பேனல்கள், டுவின் ப்ரோஜெக்டர் எல்.இ.டி. ஹெட்லைட் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் மோனோஷாக் மற்றும் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகளுக்கு மாற்றாக புதிய மாடலில் ரியர் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

 

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் மாற்றங்கள் தவிர்த்து, புதிய S1 ப்ரோ ஜென் 2 மாடலின் ரேன்ஜ் மற்றும் வேகத்தை ஒலா நிறுவனம் அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த மாடலில் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 5 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்கூட்டர் 195 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் மற்றும் மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

இந்திய சந்தையில் புதிய ஒலா S1 ப்ரோ ஜென் 2 ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 499, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய ஜென் 1 மாடலை விட ரூ. 7 ஆயிரம் வரை அதிகம் ஆகும். இதன் மூலம் ஒலா நிறுவனம் ஒலா S1 ப்ரோ, S1 ஏர் மற்றும் S1X போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

Tags:    

Similar News