கார்

வேற லெவல் அப்டேட்களுடன் புது வால்வோ கார் இந்தியாவில் அறிமுகம்

Published On 2025-03-05 11:13 IST   |   Update On 2025-03-05 11:13:00 IST
  • 2025 வால்வோ XC90 அதன் தோற்றத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுள்ளது.
  • புதிய ஏர் டேம் அமைப்புடன் வரும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் வழங்கப்பட்டுள்ளது.

சொகுசு கார்களுக்கு பிரபலமானது வோல்வோ நிறுவனம். இந்நிறுவனம் ஃபிளாக்ஷிப் XC90 SUVயின் தற்போதைய மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.1 கோடியே 20 லட்சம் என (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2025 வால்வோ XC90 அதன் தோற்றத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுள்ளது. இதன் முன்புற கிரில் மற்றும் இருபுறமும் மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்களுக்குள், ரீ-வொர்க் செய்யப்பட்ட T-வடிவ DRLகளுடன் முன்புக்கம் அதிகளவு புதுப்பிக்கப்பட்ட அம்சங்களை கொண்டுள்ளது. புதிய ஏர் டேம் அமைப்புடன் வரும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கார் தற்போது 20-இன்ச் அலாய் வீல்களுக்கான புதிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் உள்புறத்தில் 12.3-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 11.2-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், காற்றோட்டம் மற்றும் மசாஜ் வசதிகளுடன் கூடிய பவர்-அட்ஜஸ்டபிள் இருக்கைகள், வண்ண ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், நான்கு-மண்டல காலநிலை கட்டுப்பாடு, போவர்ஸ் & வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.



பாதுகாப்பைப் பொறுத்தவரை, லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அம்சங்கள், 360-டிகிரி கேமரா, ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பார்க்கிங் அசிஸ்டண்ட் மற்றும் கூடுதலா பாதுகாப்பு வசதிகளை விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் ஆப்ஷனாக வழங்குகிறது.

2025 வோல்வோ XC90 48V மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினைப் பெறுகிறது. மைல்ட்-ஹைப்ரிட் பவர்டிரெய்ன் 250 hp மற்றும் 360 Nm டார்க்கை உருவாக்குகிறது, மேலும் AWD அமைப்புடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News