கார்
ஹோண்டா உடன் இணையும் பேச்சுவார்த்தையை கைவிட நிசான் முடிவு என தகவல்
- நிசான், ஹோண்டா ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
- நிசானின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விரைவில் கூடி பேசவுள்ளனர்.
பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களான நிசான் மற்றும் ஹோண்டா ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது .
ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான் மற்றும் ஹோண்டா ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து உலகின் 3 ஆவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஹோண்டா உடனான இணைப்பு பேச்சுவார்த்தையை கைவிட நிசான் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக நிசானின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விரைவில் கூடி நடவடிக்கை எடுக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளியில் பரவியவுடன் ஹோண்டா மற்றும் நிஸானின் பங்குகள் கணிசமான உயர்வை கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.