கார்

ஹோண்டா - சோனி இணைந்து தயாரித்த எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு தொடங்கியது

Published On 2025-01-07 19:45 IST   |   Update On 2025-01-07 19:45:00 IST
  • ஹோண்டா மற்றும் சோனி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.
  • இந்த காரின் தொடக்க விலையாக 77 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து, ஜப்பானின் சோனி தயாரிக்கும் அஃபீலா ஏ1 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.

இந்தமுன்பதிவு கலிபோர்னியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தற்போது திறக்கப்பட்டுள்ளது. இது 2026 முதல் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற உலகளாவிய சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ளது.

இது ஹோண்டா மற்றும் சோனி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.

இந்த காரின் தொடக்க விலையாக 77 லட்ச ரூபாயும், ப்ரீமியம் ரக கார் 88 லட்ச ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் காரில் 482 bhp ஆற்றலை வழங்கும் இரட்டை மின்சார மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 91kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியில் 150kW வேகத்தில் வேகமாக சார்ஜ் செய்யலாம். இதில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 483 கிமீ தூரம் வரை செல்லலாம்.

Tags:    

Similar News