முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த நிசான்- எலான் மஸ்க் பதில்
- நிசான் நிறுவனத்தின் பெரும் பகுதியை ரெனால்ட் கொண்டுள்ளது.
- முதலீட்டாளர்களுக்கு நிசான் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
நிசான் மோட்டார் கார்ப்பரேசன் ('Nissan Motor Corporation) என்பது ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். இது பொதுவாக நிசான் என்ற பெயரால் அறியப்படுகிறது. 1999-ம் ஆண்டு பிரான்சு நாட்டு கார் உற்பத்தி நிறுவனத்துடன் சேர்ந்து, ரெனால்ட்-நிசான் அலையன்சு எனப்படும் கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது.
2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, நிசான் நிறுவனத்தில் 43.4% பங்குகளை ரெனால்ட் கொண்டுள்ளது. ரெனால்ட் நிறுவனத்தில் 15% ரெனால்ட் நிறுவனப் பங்குகளை நிசான் கொண்டுள்ளது.
இந்த நிலையில், 14 மாதங்கள் வரை நிறுவனத்தை நடத்துவதற்கு நிதி உள்ள நிலையில், மேற்கொண்டு நிறுவனத்தை நடத்த முதலீட்டாளர்களுக்கு நிசான் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
நிசான் விடுத்த அழைப்புக்கு டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், எந்த கார் நிறுவனமும் முன்வராது என்று கூறியுள்ளார்.
நிசானில் நீண்டகாலமாக பங்குகளை வைத்திருந்த ரெனால்ட் அதன் பங்குகளை விற்பனை செய்வதால் நிசானுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.