வேற மாதிரி மாறப்போகும் ஹோண்டா அமேஸ்.. வெளியான படங்கள்..!
- அதிநவீன தோற்றம் மற்றும் அம்சங்களை கொண்டுள்ளது.
- இந்த காரில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.
ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் தனது முற்றிலும் புதிய அமேஸ் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன்படி புதிய தலைமுறை அமேஸ் மாடல் டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது.
வெளியீட்டுக்கு முன்னதாக புதிய தலைமுறை அமேஸ் மாடலின் ஸ்கெட்ச் படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் புதிய காரின் வெளிப்புறம் மற்றும் உள்புற டிசைன் எப்படி இருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி புதிய அமேஸ் மாடல் முழுமையாக மாற்றப்பட்ட கேபின், அதிநவீன தோற்றம் மற்றும் அம்சங்களை கொண்டுள்ளது.
இதில் டூயல் டோன் டேஷ்போர்டு, ஃபிரீ-ஸ்டான்டிங் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், டச் கேபாசிடிவ் பட்டன்கள், செவ்வக வடிவம் கொண்ட ஏசி வென்ட்கள், டேஷ்போர்டில் மெஷ் பேட்டன், HVAC பேனல் மற்றும் சிறிய ஸ்கிரீன் இடம்பெற்று இருக்கிறது. கூடவே 3-ஸ்போக் கொண்ட ஸ்டீரிங் வீல் மற்றும் கண்ட்ரோல்கள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், பெய்க் சீட் கவர்கள் வழங்கப்படுகின்றன.
மற்ற வசதிகளை பொருத்தவரை புதிய ஹோண்டா அமேஸ் மாடலில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், டைப் சி சார்ஜிங் போர்ட்கள், வயர்லெஸ் சார்ஜர், கப் ஹோல்டர்கள், 12 வோல்ட் பவர் அவுட்லெட், ADAS சூட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
மெக்கானிக்கல் அடிப்படையில் இந்த கார் எவ்வித மாற்றமும் இன்றி 1.2 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல், CVT கியர்பாக்ஸ் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்திய சந்தையில் புதிய தலைமுறை அமேஸ் மாடல் முற்றிலும் புதிய மாருதி சுசுகி டிசையர், ஹூண்டாய் ஆரா மற்றும் டாடா டிகோர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.