கார்

கிட்டத்தட்ட 90 ஆயிரம் யூனிட்கள் - விற்ற கார்களை திரும்ப பெறும் ஹோண்டா!

Published On 2024-10-28 12:01 GMT   |   Update On 2024-10-28 12:01 GMT
  • ஹோண்டா நிறுவனம் இலவசமாக சரி செய்து கொடுக்கும்.
  • கார்களை திரும்ப பெறப்படும் பணிகள் நவம்பர் 5 ஆம் தேதி துவங்குகிறது.

ஹோண்டா நிறுவனம் தனது அமேஸ், சிட்டி, BR-V, ஜாஸ், WR-V மற்றும் ப்ரியோ மாடல்களை சேர்த்து சுமார் 90 ஆயிரத்திற்கும் அதிக கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது. திரும்ப பெறப்படும் கார்களின் ஃபியூவல் பம்ப்-இல் கோளாறு இருப்பதாகவும், அதனை ஹோண்டா நிறுவனம் இலவசமாக சரி செய்து கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கார்களை திரும்ப பெறப்படும் பணிகள் நவம்பர் 5 ஆம் தேதி துவங்குகிறது. பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தி வருவோரை, ஹோண்டா விற்பனை மையங்கள் தொடர்பு கொண்டு, பிரச்சினை குறித்த தகவல்களை வழங்கும். இதோடு, அக்கார்டு, அமேஸ், ப்ரியோ, BR-V, சிட்டி, சிவிக், ஜாஸ் மற்றும் WR-V மாடல்களின் பழைய யூனிட்களும் அடங்கும்.

 


பிரச்சினைகள் அல்லது சந்தேகம் உள்ள வாடிக்கையாளர்கள் அருகாமையில் உள்ள ஹோண்டா விற்பனை மையங்களுக்கு நேரடியாக சென்றோ அல்லது, ஹோண்டா வலைதளத்தில் வாகன அடையாள எண்ணை பதிவிட்டோ கார் பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர கடந்த ஜூன் 2017 முதல் அக்டோபர் 2023 வரையிலான காலக்கட்டத்தில் ஃபியூவல் பம்ப்களை ஹோண்டா விற்பனை மையத்தில் இருந்து வாங்கியிருந்தால், அவர்களும் வாகனத்தை சரி செய்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

Tags:    

Similar News