கார்

சிட்ரோயன் C3 ஆட்டோமேடிக் இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2024-09-29 15:24 GMT   |   Update On 2024-09-29 15:24 GMT
  • சிட்ரோயன் C3 ஆட்டோமேடிக் அம்சங்கள் அதன் மேனுவல் வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது.
  • இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.

சிட்ரோயன் நிறுவனம் தனது சிட்ரோயன் C3 ஆட்டோமேடிக் வெர்ஷனின் விலை விவரங்களை அறிவித்து விட்டது. டாப் என்ட் ஷைன் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும் சிட்ரோயன் C3 ஆட்டோமேடிக் மாடலின் விலை ரூ. 10 லட்சம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 10 லட்சத்து 27 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை இந்த காரிலும் அதன் மேனுவல் வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த வெர்ஷனில் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட விங் மிரர்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.2 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன், ஆறு ஏர் பேக் வழங்கப்படுகிறது.

சிட்ரோயன் C3 மாடலிலும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே எஞ்சின் சிட்ரோயன் பசால்ட் மற்றும் C3 ஏர்கிராஸ் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 110 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

விலை விவரங்கள்:

சிட்ரோயன் C3 டர்போ ஆட்டோமேடிக் ஷைன் ரூ. 10 லட்சம்

சிட்ரோயன் C3 டர்போ ஆட்டோமேடிக் ஷைன் வைப் பேக் ரூ. 10.12 லட்சம்

சிட்ரோயன் C3 டர்போ ஆட்டோமேடிக் ஷைன் டூயல் டோன் வைப் பேக் ரூ. 10.27 லட்சம் 

Tags:    

Similar News