கார்

டக்குனு லோகோ மாற்றிய ஆடி நிறுவனம் - ஏன் தெரியுமா?

Published On 2024-11-26 09:39 GMT   |   Update On 2024-11-26 09:39 GMT
  • உலகளவில் இந்த லோகோ மிகவும் பிரபலமான ஒன்று.
  • இந்த லோகோ இடம்பெறாமல் இருந்தது.

ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி சீனாவில் தனது லோகோவை மாற்றி இருக்கிறது. ஆடி நிறுவனத்தின் முந்தைய லோகோ நான்கு வளையங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டு இருக்கும். உலகளவில் இந்த லோகோ மிகவும் பிரபலமான ஒன்று.

இந்த நிலையில் சீன சந்தையில் மட்டும் லோகோவை மாற்றுவது என ஆடி நிறுவனம் எடுத்துள்ள முடிவு அதன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1930 ஆம் ஆண்டு முதல் வளையங்கள் அடங்கிய லோகோ பயன்பாட்டில் இருந்து வந்தது. சமீபத்திய ஆட்டோ நிகழ்வில் ஆடி நிறுவனம் காட்சிப்படுத்திய இ கான்செப்ட் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்பேக் மாடலில் இந்த லோகோ இடம்பெறாமல் இருந்தது.

 


கான்செப்ட் வாகனத்தின் முகப்பில் ஆடி (AUDI) என்ற வார்த்தை மட்டும் இடம்பெற்று இருந்தது. முன்னதாக மற்றொரு உலகின் முன்னணி ஆடம்பர கார் விற்பனையாளரான ஜாகுவார் தனது லோகோவை மாற்றிய நிலையில், தற்போது ஆடி நிறுவனமும் தனது லோகோவை மாற்றி இருக்கிறது.

சீன ஆட்டோமொபைல் நிறுவனமான SAIC உடனான ஒப்பந்தத்தின் கீழ் ஆடி தனது லோகோவை மாற்றியுள்ளது. அதன்படி இரு நிறுவனங்களும் உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையில் இளம் வாடிக்கையாளர்களை கவர இலக்கு நிர்ணயித்துள்ளன. 

Tags:    

Similar News