கார்

ஜப்பானில் அதிகம் விற்பனையாகும் மாருதி கார் மாடல்

Published On 2024-12-11 07:03 GMT   |   Update On 2024-12-11 07:03 GMT
  • பன்ச் மற்றும் நெக்சான் மாடல்களை முந்தியுள்ளது.
  • இந்த கார் ஒன்பது மடங்கு அதிக யூனிட்கள் விற்பனை.

மாருதி சுசுகி நிறுவனம் தனது Fronx மாடல் காரை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. இந்த கார் உள்நாடு மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் Fronx மற்றம் பிரெஸ்ஸா மாடல்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மற்றும் நெக்சான் மாடல்களை முந்தியுள்ளது.

இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்ற Fronx மாடல் கடந்த அக்டோபர் மாதம் ஜப்பான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஜப்பான் நாட்டில் அமோக வரவேற்பை பெற்றது. ஒரு மாதத்தில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்டதை விட இந்த கார் ஒன்பது மடங்கு அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

கடந்த மாதம் இந்த காரின் ஏற்றுமதி மட்டும் 11.49 சதவீதமாக இருந்தது. உள்நாட்டிலும் இந்த கார் புதிய சாதனை படைத்துள்ளது. அதிவேகமாக 2 லட்சம் யூனிட்கள் விற்பனையான கார் மாடல் என்ற பெருமையை Fronx பெற்றுள்ளது. அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான கார்களில் இரண்டாவது இடம் பிடித்தது.

இந்தியாவில் மட்டும் இந்த கார் 16 ஆயிரத்து 419 யூனிட்கள் விற்பனையான நிலையில், ஏற்றுமதியில் 15 சதவீத பங்குகளுக்கும் அதிகமாக பெற்று அசத்தியது.

Tags:    

Similar News