இது புதுசு

விலை ரூ. 2.2 கோடி.. வேற லெவல் அப்டேட்களுடன் மெர்சிடிஸ் AMG GLE 53 கூப் அறிமுகம்

Published On 2024-01-31 14:51 GMT   |   Update On 2024-01-31 14:51 GMT
  • இந்த காருடன் ஏராளமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
  • இந்த காரில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது AMG GLE 53 கூப் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய AMG GLE 53 கூப் மாடலின் விலை ரூ. 1 கோடியே 85 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது தற்போது விற்பனை செய்யப்படும் AMG GLE 53 கூப் மாடலை விட ரூ. 14 லட்சம் அதிகம் ஆகும்.

பென்ஸ் AMG GLE 53 கூப் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் கேபினில் புதிய தொழில்நுட்பம், அதிக திறன் கொண்ட என்ஜின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன. இதில் வழங்கப்படும் ஏராளாமான இதர ஆப்ஷன்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் பட்சத்தில் இந்த காரின் விலை ரூ. 2.2 கோடி, எக்ஸ்-ஷோரூம் வரை அதிகரிக்கும் என மெர்சிடிஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

 


தோற்றத்தில் புதிய கார் அதிக மாற்றங்கள் இன்றி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் கிரில் வடிவம் சற்றே மாற்றப்பட்டு, ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட்களில் புதிய லைட்டிங் வழங்கப்பட்டுள்ளது. பம்ப்பர்களில் சிறு மாற்றங்கள் செய்யப்படு, புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் கேபின் பகுதியில் இரண்டு டிஸ்ப்ளேக்கள் உள்ளன. இன்டீரியர் முழுக்க மென்மையான அனுபவத்தை வழங்கும் பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் முற்றிலும் புதிய MBUX இயங்குதளம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டச் சென்சிடிவ் கன்ட்ரோல்கள் கொண்ட புதிய AMG ல்டீரிங், கப் ஹோல்டர்களில் டெம்பரேச்சர் கன்ட்ரோல், 100 வாட் டைப் சி சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன், பர்மெஸ்டர் 3D சவுண்ட் சிஸ்டம், ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஹீடெட் மற்றும் வென்டிலேடெட் முன்புற இருக்கைகள், பானரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர், 360 டிகிரி கேமரா, ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட், பிலைன்ட் ஸ்பாட் மானிட்டரிங் போன்ற வசதிகள் உள்ளன.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் AMG GLE 53 கூப் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தற்போது 40 நியூட்டன் மீட்டர் வரை அதிக டார்க் வெளிப்படுத்தும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த என்ஜின் 429 ஹெச்.பி. பவர் மற்றும் 600 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இந்த என்ஜினுடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 20 ஹெச்.பி. பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் வரை இழுவிசையை அதிகப்படுத்துகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

இந்திய சந்தையில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் AMG GLE 53 கூப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆடி RS Q8 மற்றும் போர்ஷே கேயென் கூப் பேஸ் வேரியன்ட் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Tags:    

Similar News