இது புதுசு

கோப்புப்படம் 

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெகட்ரிக் பைக் - இணையத்தில் லீக் ஆன அறிமுக விவரம்!

Published On 2023-04-12 14:53 GMT   |   Update On 2023-04-12 14:53 GMT
  • ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்குவது பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
  • சமீபத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் தமிழ் நாட்டின் செய்யாறு பகுதியில் புதிய உற்பத்தி ஆலை கட்டமைக்க இருப்பதாக கூறப்பட்டது.

ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் எலெக்ட்ரிக் மாடல்களும் அடங்கும். பிரீமியம் லைஃப்ஸ்டைல் பிரிவில் அனைத்து மாடல்களையும் களமிறக்கி வரும் ராயல் என்பீல்டு, எலெக்ட்ரிக் வாகனங்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன், எலெக்ட்ரிக் ஹிமாலயன் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. மேலும் இது தான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் என்றும் கூறப்பட்டது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவை பொருத்தவரை முதலில் அதிக விலை கொண்ட மாடலை அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

பின் இதைத் தொடர்ந்து பிரத்யேக மோட்டார்சைக்கிள், இறுதியில் குறைந்த விலை பைக் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இவை வரும் ஆண்டுகளில் படிப்படியாக அறிமுகமாகும். தற்போது இருக்கும் ராயல் என்பீல்டு மாடல்களின் அடிப்படையில், இந்த திட்டம் நிறுவன மாடல்களுக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுக்கும் என கூறப்படுகிறது.

ராயல் என்பீல்டு உருவாக்கி வரும் முதல் எலெக்ட்ரிக் வாகனம் L1A எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர ராயல் என்பீல்டு நிறுவனம் மற்றொரு பிளாட்ஃபார்மை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த பிளாட்ஃபார்ம் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு எலெக்ட்ரிக் வாகன நிறுவனமான ஸ்டார்க்-இல் ராயல் என்பீல்டு நிறுவனம் கணிசமான பங்குகளை வாங்கி இருக்கிறது. அதன்படி இரு நிறுவனங்கள் கூட்டணியில் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்கள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், இந்த திட்டம் அமலுக்கு வர அதிக காலம் ஆகும் என்றே தெரிகிறது.

Photo Courtesy: Autocar 

Tags:    

Similar News