473கி.மீ. ரேஞ்ச் வழங்கும் கிரெட்டா எலெக்ட்ரிக் கார் அறிமுகம்
- கிரெட்டா எலெக்ட்ரிக் மாடல் விவரங்கள் வெளியாகி உள்ளது.
- டெயில்கேட்-இல் "எலெக்ட்ரிக்" பேட்ஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கிரெட்டா எலெக்ட்ரிக் கார் மாடலை ஜனவரி 17 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த கார் 2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய கிரெட்டா எலெக்ட்ரிக் மாடல் விவரங்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி புதிய கிரெட்டா எலெக்ட்ரிக் மாடலில் பிளாக்டு-அவுட் கிரில், சார்ஜிங் போர்ட், இருபுறமும் மாற்றப்பட்ட பம்ப்பர்கள், பிளாக்டு-அவுட் ORVMகள், ஏரோ இன்செர்ட்களை கொண்ட முற்றிலும் புதிய 17 இன்ச் அலாய் வீல்கள், எல்.இ.டி. லைட் பார்கள், டெயில்கேட்-இல் "எலெக்ட்ரிக்" பேட்ஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.
உள்புறத்தில் 2025 ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் மாடலில் பானரோமிக் சன்ரூஃப், இரட்டை 10.25 இன்ச் ஸ்கிரீன்கள், ADAS சூட், V2L தொழில்நுட்பம், முற்றிலும் புதிய சென்டர் கன்சோல், டிரைவ் மோட்களுக்கு சுழலும் டயல், 360 டிகிரி ேமரா, ஷிஃப்ட் பை வயர் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கீ உள்ளது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிரெட்டா எலெக்ட்ரிக் மாடலில் 51.4 கிலோவாட் ஹவர் மற்றும் 42 கிலோவாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இவை முறையே 473 கிலோமீட்டர்கள் மற்றும் 390 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இந்த காரை டி.சி. ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு 58 நிமிடங்களில் 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றிட முடியும்.
சுவரில் பொருத்தப்பட்ட 11 கிலோவாட் ஹோம் சார்ஜர் கொண்டு 10-இல் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் ஏற்ற நான்கு மணி நேரங்கள் ஆகும். வெளியிடப்பட்டதும், இந்த எலெக்ட்ரிக் கார் எம்.ஜி. ZS EV, டாடா கர்வ் EV, மாருதி இ-விட்டாரா மற்றும் மஹிந்திரா BE6 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக அமையும்.