இது புதுசு
குழந்தைகளை தள்ளிச் செல்லும் வண்டியை அறிமுகம் செய்த லம்போர்கினி - விலை எவ்வளவு தெரியுமா?
- உலகளவில் வெறும் 500 வண்டிகள் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த வண்டியில் கொசு வலை உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பிரபல சொகுசு கார் நிறுவனமான லம்போர்கினி குழந்தைகளை தள்ளிச் செல்லும் வண்டியான Stroller-களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.4.3 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
லிமிட்டட் எடிசனாக உருவாகியுள்ள உலகளவில் வெறும் 500 வண்டிகள் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வண்டியில் கொசு வலை உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது பெற்றோர்கள் எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருப்பதை உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.