680 ஹெச்பி பவர் கொண்ட மெர்சிடிஸ் AMG GLC அறிமுகம் - என்னென்ன அம்சங்கள் தெரியுமா?
- மெர்சிடிஸ் AMG GLC 43 4மேடிக் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
- புதிய மெர்சிடிஸ் AMG GLC மாடலில் 4-வீல் டிரைவ், AMG டைனமிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய AMG GLC மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மெர்சிடிஸ் AMG GLC மாடலில் மேம்பட்ட டிசைன், டிரைவிங் டைனமிக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த காரில் 680 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
என்ட்ரி லெவல் மெர்சிடிஸ் AMG GLC 43 4மேடிக் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 421 ஹெச்பி பவர், 499 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டிவிடும்.
AMG GLC 63 S e-பெர்பார்மன்ஸ் பிளாக்ஷிப் மாடலிலும் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 204 ஹெச்பி பவர் கொண்ட மோட்டார் மற்றும் 6.1 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இது 680 ஹெச்பி பவர், 1020 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 274 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மின்சக்தியில் அதிகபட்சம் 12 கிலோமீட்டர்கள் வரை மட்டுமே செல்லும்.
புதிய மெர்சிடிஸ் AMG GLC மாடலில் 4-வீல் டிரைவ், AMG டைனமிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை காரின் எலெக்ட்ரிக் ஸ்டேபிலிட்டி மற்றும் ஸ்டீரிங் ரெஸ்பான்ஸ் உள்ளிட்டவைகளை சிறப்பாக கன்ட்ரோல் செய்யும் திறன் வழங்குகின்றன. AMG ரைடு கன்ட்ரோல் இந்த காரின் ஸ்டான்டர்டு அம்சம் ஆகும். இத்துடன் ஸ்போர்ட்ஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய AMG GLC மாடல் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய தலைமுறை GLC எஸ்யுவி ஸ்டான்டர்டு மாடலை ஆகஸ்ட் 9-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.