விரைவில் இந்தியா வரும் புது பென்ஸ் கார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- புதிய GLS ஃபேஸ்லிஃப்ட் மாடலின் கிரில் மாற்றப்படுகிறது.
- அலாய் வீல்கள் ஹிமாலயாஸ் கிரே நிறத்தில் வழங்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது GLS ஃபேஸ்லிஃப்ட் மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. ஃபேஸ்லிஃப்ட் மாடலில் காஸ்மெடிக் அப்கிரேடு மற்றும் புதிய அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
புதிய GLS ஃபேஸ்லிஃப்ட் மாடலின் கிரில் மாற்றப்படுகிறது. இத்துடன் ஹெட்லேம்ப்களில், புதிய எல்.இ.டி. பேட்டன் வழங்கப்படுகிறது. இதன் பம்ப்பர் ரி-ப்ரோஃபைல் செய்யப்பட்டு புதிய டிசைன் வழங்கப்படுகிறது. இத்துடன் 20-இன்ச் அளவில் புதிய அலாய் வீல்கள் ஹிமாலயாஸ் கிரே நிறத்தில் வழங்கப்படுகிறது. GLS மாடல் ஏழு பேர் பயணிக்கும் எஸ்.யு.வி. ஆகும்.
இந்த கார் கேட்டலானா பிரவுன் மற்றும் பஹியா பிரவுன் இன்டீரியர் ஆப்ஷன் கொண்டிருக்கிறது. இதன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் அப்டேட் செய்யப்பட்டு அதிநவீன MBUX வழங்கப்படுகிறது. இத்துடன் GLS ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஆஃப் ரோடு மோட் 360 டிகிரி கேமரா மூலம் திரையில் அசத்தலான அனுபவத்தை வழங்கும்.
தற்போது விற்பனை செய்யப்படும் மெர்சிடிஸ் GLS மாடலில் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேம்பட்ட GLS ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் இதே போன்ற என்ஜின் வழங்கப்படும் என்றும் கூடுதலாக பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.