விரைவில் அறிமுகமாகும் கியா EV9 - அசத்தல் டீசர் வெளியீடு!
- கியா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியானது.
- கியா EV9 மாடலில் வழங்கப்படும் மோட்டார் 250 முதல் 300 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
கியா நிறுவனம் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய கியா எலெக்ட்ரிக் கார் இம்மாத இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கியா EV9 மாடல் பிரத்யேக எலெக்ட்ரிக் பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்படுகிறது.
தற்போது கியா வெளியிட்டு இருக்கும் டீசர்களின் படி புதிய EV9 மாடல் அளவில் பெரியதாக இருக்கும் என்றும் இது மூன்றடுக்கு இருக்கைகள் கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யுவி என்பதும் தெரியவந்தள்ளது. டீசரின் படி கான்செப்டில் இருப்பதை போன்று பிரத்யேக எல்இடி ஹெட்லேம்ப், மெல்லிய, செங்குத்தாக எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகிறது.
கான்செப்ட் மாடலுடன் ஒப்பிடும் போது கியா EV9 ப்ரோடக்ஷன் வெர்ஷனில் சிறிய 20 அல்லது 21 இன்ச் வீல்கள், ORVM-கள் வழங்கப்படுகின்றன. புதிய கியா EV9 அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இதில் 250 முதல் 300 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படலாம்.
இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 450 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என கூறப்படுகிறது. இதன் ஸ்டாண்டர்டு வெர்ஷனில் ஒற்றை மோட்டார் செட்டப், GT வெர்ஷனில் டூயல் மோட்டார் AWD டிரைவ் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
கியா EV9 எலெக்ட்ரிக் கார் சர்வதேச வெளியீடு இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்றும் விற்பனை ஆண்டு இறுதியில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் புதிய கியா EV9 மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.