இது தான் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் - இணையத்தில் வெளியான சூப்பர் தகவல்!
- புதிய எலெக்ட்ரிக் கார் உலகின் முதல் ஆடம்பர எலெக்ட்ரிக் எஸ்யுவி-யாக இருக்கும்.
- இந்த காருக்கான முன்பதிவு இந்த ஆண்டிலேயே துவங்கிவிடும் என்று தெரிகிறது.
லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ரேன்ஜ் ரோவர் EV என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த கார் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ரேன்ஜ் ரோவர் EV மாடல் லண்டனில் உள்ள சாலிஹல் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த காருக்கான முன்பதிவு இந்த ஆண்டிலேயே துவங்கிவிடும் என்று தெரிகிறது.
புதிய ரேன்ஜ் ரோவர் EV மாடல் MLA பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கார் ஹைப்ரிட் ஆப்ஷன் கொண்ட IC என்ஜின் மற்றும் முழுமையான எலெக்ட்ரிக் பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும். புதிய எலெக்ட்ரிக் கார் உலகின் முதல் ஆடம்பர எலெக்ட்ரிக் எஸ்யுவி-யாக இருக்கும் என ஜாகுவார் லேண்ட் ரோவர் தெரிவித்து இருக்கிறது.
"உண்மையான ரேன்ஜ் ரோவர் மதிப்பை இது எடுத்துரைக்கும். சிறந்த ஆஃப்-ரோடிங் திறன் கொண்டிருக்கும். தனித்துவம் மிக்க ஆடம்பர வசதிகளை கொண்டிருப்பதோடு, இந்த பிராண்டு எதை உருவாக்கும் என்பதற்கு எடுத்துக் காட்டாக இருக்கும், " என்று ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் வாகன திட்ட பிரிவு இயக்குனர் நிக் காலின்ஸ் தெரிவித்து இருக்கிறார்.
2026-க்குள் ரேன்ஜ் ரோவர், டிஸ்கவரி, டிஃபெண்டர் மற்றும் ஜாகுவார் என தனது பிராண்டுகள் அனைத்திலும் எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் திட்டத்திற்கு ஏற்ப MLA பிளாட்ஃபார்மில் புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் உருவாக்கப்பட இருக்கிறது.