இது புதுசு
null

அழகிய டிசைன், 900 கி.மீ. ரேன்ஜ்.. சியோமி எலெக்ட்ரிக் காரின் விலை இவ்வளவு தானா?

Published On 2024-03-30 11:31 GMT   |   Update On 2024-03-30 11:39 GMT
  • சியோமி SU7 மாடல் மே மாதம் விற்பனைக்கு வருகிறது.
  • 900 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும்.

சியோமி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனம் - SU7 மாடலை அறிமுகம் செய்தது. ஆன்லைன் நேரலையில் சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை அறிவித்தார். அறிமுகத்தின் போது புதிய SU7 மாடலை டெஸ்லா மாடல் 3 காருடன் நேரடியாக ஒப்பிட்டார். இதோடு, சியோமி SU7 மாடல் சீன சந்தையில் மே மாதம் விற்பனைக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.

புதிய சியோமி SU7 மாடலில் டூயல் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை இணைந்து 637 ஹெச்.பி. பவர், 838 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. பயனர்கள் தேர்வு செய்யும் வேரியண்டிற்கு ஏற்ப சியோமி SU7 மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 900 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று சியோமி தெரிவித்துள்ளது.

 


இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 2.78 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 265 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. ஐந்து மீட்டர்கள் நீளமாக உள்ள சியோமி SU7 2 மீட்டர்கள் அகலம், 3 மீட்டர்கள் வீல்பஸ் கொண்டிருக்கிறது. இந்த கார் மொத்தத்தில் ஒன்பது விதமான நிறங்களில் கிடைக்கும்.

புதிய எலெக்ட்ரிக் கார் அம்சங்களில் - வாட்டர் டிராப் ஹெட்லைட்கள், ஹாலோ டெயில் லைட்கள், ஆக்டிவ் ரியர் ஸ்பாயிலர், ஃபுளோயிங் கர்வ், மறைக்கப்பட்ட நிலையில் கதவுகளின் கைப்பிடிகள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார் சியோமியின் ஹைப்பர் ஒ.எஸ். கொண்டிருக்கிறது.

இதை கொண்டு பயனர்கள் தங்களது சியோமி ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் இதர சாதனங்களை காருடன் இணைத்துக் கொள்ள முடியும். இந்த காரில் ராப்-அரவுண்ட் காக்பிட், பல்வேறு ஸ்கிரீன்கள், டிரைவர் அசிஸ்டன்ஸ் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

சியோமி SU7 பேஸ் மாடலில் 73.6 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இது முழு சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது. இந்த வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும். இதன் விலை சீன சந்தையில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 900 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 24 லட்சத்து 90 ஆயிரத்து 413 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த காரின் டாப் என்ட் வேரியண்டில் 101 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இதை முழு சார்ஜ் செய்தால் 900 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும். இதன் விலை 2 லட்சத்து 99 ஆயிரத்து 900 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 34 லட்சத்து 59 ஆயிரத்து 356 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News