சினிமா செய்திகள்

1000 கோடி நிரந்தரமல்ல மக்கள் அன்பே என்றும் நிரந்தரம் - அல்லு அர்ஜூன் நெகிழ்ச்சி

Published On 2024-12-12 14:00 GMT   |   Update On 2024-12-12 14:00 GMT
  • கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது
  • புஷ்பா திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் 1002 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.

'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், இதுவரை இந்தியன் சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகம் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் புஷ்பா திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் 1002 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இதன்மூலம் இந்திய சினிமாவில் அதிவேகமாக 1000 கோடி வசூலை கடந்த முதல் திரைப்படம் என்ற சாதனையை புஷ்பா 2 படைத்துள்ளது.

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இன்று விழா நடந்தது அதில் பேசிய அல்லு அர்ஜூன் "1000 கோடி ரூபாய் என்பது மக்கள் என் மீது வைத்துள்ள அன்பை குறிக்கிறது. 1000 கோடி என்பது நிரந்தரமல்ல , மக்களின் அன்பு ஒன்று மட்டுமெ நிரந்தரம். இந்த அன்பை நான் என்றும் மறக்க மாட்டேன். இந்த ரெக்கார்ட் விரைவில் முறியடிக்க வேண்டும். அது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழி திரைப்படங்கள் அடுத்த 6 மாதங்களுக்குள் இந்த சாதனையை உடைக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே திரைத்துறை வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என அர்த்தம்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News