சினிமா செய்திகள்

ஆனந்த்நாக் ஜோடியாக பிக்பாஸ் ஜனனி

Published On 2024-12-12 09:15 GMT   |   Update On 2024-12-12 09:15 GMT
  • படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
  • விரைவில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

அருண் பிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அறிவான். துரை மகாதேவன் தயாரித்துள்ள இந்த படத்தில் ஆனந்த்நாக், ஜனனி, பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கவுரி சங்கர், சரத்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் அருண் பிரசாத் கூறுகையில், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி என்கவுண்டரால் வேறு ஊருக்கு மாற்றப்படுகிறார். அங்கு அடுத்தடுத்து 4 கொலைகள் நடக்கிறது. கொலைகளுக்கு பின்னால் இருப்பது யார்? காரணம் என்ன என்பதை கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை.

துப்பறியும் திரில்லருடன் புதுமையான கதை களத்தில் படம் உருவாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு சென்னை, நெய்வேலியில் 65 நாட்கள் நடந்தது. கார்த்திக் ராம் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

Tags:    

Similar News