சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் பிறந்தநாள்.. 6 மணிக்கு வெளியாகும் சர்ப்ரைஸ் அப்டேட்.. லோகேஷ் கனகராஜ்
- இந்த படத்தில் பிரபல கன்னட நடிகரான உபேந்திரா நடிக்கிறார்.
- ரஜினிகாந்த் தேவா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருந்தனர்.
மேலும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகரான உபேந்திரா நடிக்கிறார். ரஜினிகாந்த் தேவா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் அப்டேட்டுகளை அவ்வபோது வெளியிட்டு வரும் படக்குழு, ரஜினிகாந்த் பிறந்தநாளான இன்று மாலை 6 மணிக்கு புதிய அப்டேட்டை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.