நயன்தாராவுடன் மீண்டும் நடிப்பேன்: சிம்பு
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு–நயன்தாரா, சூரி நடித்த ‘இது நம்ம ஆளு’ படம் ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது. நல்ல வசூலை குவித்துள்ளது.
சிம்பு–நயன்தாரா நடிப்புக்கு ரசிகர்களின் பாராட்டும் கிடைத்திருக்கிறது. இந்த படம் வெளியாவதில் சிறிது தாமதம் ஆனாலும், படம் நன்றாக ஓடுவதால் சிம்பு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
கூடுதல் தியேட்டர்களில் திரையிடவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ‘இது நம்ம ஆளு’ வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள சிம்பு...
‘‘என்னுடைய படத்தை மக்கள் வெற்றி அடைய செய்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படி ஒரு நாளுக்காக காத்திருந்தேன். கடவுளின் அருளால் அது இப்போது நடந்து விட்டது என்று கூறி இருந்தார்.
அடுத்து கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு – மஞ்சுமா நடித்துள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது. அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் சிம்பு 3 வேடங்களில் நடிக்க இருக்கிறார்.
இது பற்றிய தகவல்களை இணையதளத்தில் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட சிம்புவிடம் அடுத்து நயன்தாராவுடன் நடிப்பீர்களா என்று ரசிகர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், சினிமாவில் தொடர்ந்து நயன்தாராவுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருக்கிறது. என்று கூறினார்.