சினிமா

சூர்யா வில்லன் இப்போது விஜய் சேதுபதிக்கும் வில்லனாகிறார்

Published On 2016-07-12 15:28 IST   |   Update On 2016-07-12 15:28:00 IST
சூர்யா படத்தில் வில்லனாக நடித்த ஒருவர் தற்போது விஜய் சேதுபதிக்கும் வில்லனாகியிருக்கிறார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘அயன்’ படத்தில் வில்லனாக நடித்தவர் ஆகாஷ்தீப் சைகல். சேட்டு வீட்டு பையனாக நடித்திருந்த ஆகாஷ்தீப் சைகல் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருந்தார். சூர்யாவுக்கு வில்லனாக நடித்த ஆகாஷ்தீப் சைகல் தற்போது விஜய் சேதுபதிக்கும் வில்லனாகிறார்.

விஜய் சேதுபதி-டி.ராஜேந்தர் கூட்டணியில் உருவாகும் படத்தில் ஆகாஷ்தீப் சைகல் வில்லனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் கே.வி.ஆனந்த் தான் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜை நேற்று நடந்தது. மடோனா செபஸ்டியான் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி படத்திற்கு இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். 

Similar News