சினிமா

தீபிகா படுகோனேயுடன் நிச்சயதார்த்தம் முடிந்ததா?: ரன்வீர் சிங் பதில்

Published On 2016-07-23 09:50 IST   |   Update On 2016-07-23 09:50:00 IST
தீபிகா படுகோனேயுடன் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா? என்ற நிருபர்களின் கேள்விக்கு ரன்வீர் சிங் என்ன பதில் கூறியுள்ளார் என்பதை கீழே பார்க்கலாம்.
இந்தி நடிகர் இர்பான்கான் நடித்துள்ள ‘மடாரி’ படத்தின் சிறப்பு காட்சி மும்பையில் வெளியிடப்பட்டது. இதில், நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேயும் ஜோடியாக வந்து கலந்து கொண்டனர்.

அப்போது, உங்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறதே? என்று நிருபர்கள் கேட்டதற்கு, “படங்களை பற்றிய நல்ல கேள்விகளை மட்டும் கேளுங்கள். இது என்னுடைய வேண்டுகோள்” என்றார்.

இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்றும் 30 வயது நடிகை தீபிகா படுகோனே தெரிவித்தார்.

Similar News