சினிமா
காற்று வெளியிடை முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது
கார்த்தி நடித்து வரும் காற்று வெளியிடை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதுகுறித்து கீழே பார்ப்போம்...
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம்தான் ‘காற்று வெளியிடை’. இப்படத்தில் பாலிவுட் நாயகி அதிதி ராவ் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், டெல்லி கணேஷ், ஆர்.ஜே.பாலாஜி, ருக்மிணி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் தொடங்கி நடைபெற்று வந்தது.
விறுவிறுப்பாக சென்ற முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் காஷ்மீர் செல்லவிருக்கின்றனர். அங்கு பாடல்கள் மற்றும் சில முக்கியமான காட்சிகளை படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் கார்த்தி பைலட்டாக நடித்து வருகிறார். இந்த வருட இறுதியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். மணிரத்னம் தனது சொந்த நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மூலமாக இப்படத்தை தயாரித்து வருகிறார்.