சினிமா
யுவன் இசையில் பாடிய ரம்யா நம்பீசன்
யுவன் இசையில் ரம்யா நம்பீசன் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதுகுறித்து கீழே பார்ப்போம்...
‘பீட்சா’, ‘சேதுபதி’ உள்ளிட்ட படங்களில் நடித்த ரம்யா நம்பீசன், ஆரம்பத்தில் மலையாளத்தில் ஒருசில படங்களில் பாடி வந்தார். அவரது குரலை கேட்டு மயங்கிய டி.இமான், விஷால் நடித்த ‘பாண்டியநாடு’ படத்தில் ‘பை பை பை கலாச்சி பை’ என்ற பாடலை ரம்யா நம்பீசனை வைத்து பாடவைத்தார்.
அந்த பாடல் பெரிய அளவில் ஹிட் ஆகவே, ரம்யா நம்பீசன் படங்களில் நடித்துக் கொண்டு, அவ்வப்போது சில படங்களில் பாடல்களையும் பாடி வருகிறார். இந்நிலையில், அதர்வா நடித்து வரும் ‘செம போதை ஆகாதா’ என்ற படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ரம்யா நம்பீசன் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
ரம்யா நம்பீசன் பாடியுள்ள பாடலை இப்படத்தின் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் எழுதியிருக்கிறார். பாடல் சிறப்பாக வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ‘காவியத்தலைவன்’ பட நாயகி அனைகா சோதி நடிக்கிறார். மேலும், பெங்காலி நடிகை மிஷ்தி சக்ரபூர்த்தியும் இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார்.
அதர்வா கிக்காஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற தனது சொந்த நிறுவனம் மூலம் முதல்படமாக இதை தயாரிக்கிறார்.